கட்சி மாறினால் வீடு தேடி வெட்டுவேன் என பேசிய அதிமுக ஒன்றிய செயலாளர் சண்முககனியை கைது செய்ய முயன்றபோது மாடியில் இருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


கடந்த 28ம் தேதி சாத்தூரில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகக்கணி கட்சியினர் மத்தியில் பேசும்போது அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு கட்சி மாறி போனால் அவனை வீடு தேடி  வெட்டுவேன், மாவட்ட செயலாளரிடம் சொல்லிவிட்டு வெட்டுவேன், என் வெட்டு முதல் வெட்டாக இருக்கும், உங்கள் பிரேத பரிசோதனை அரசு மருத்துவமனையில்தான் இருக்கும் என கட்சியினரை மிரட்டும் வகையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.




இது குறித்து சண்முகக்கணி மீது கொலை மிரட்டல், அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது, கலவரத்தை ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக பேசியது ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சாத்தூர் காவல்நிலைய போலீசார் அவரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்


இந்நிலையில் அவரது வீட்டில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறை அவரை கைது செய்ய முயன்ற போது வீட்டின் மாடியிலிருந்து குதித்து தப்பித்து செல்ல முயன்றபோது அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு தற்பொழுது கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவினருக்கு அடுத்தடுத்து சோதனை தொடர்கிறது. அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக, கைதாகி, சமீபத்தில் ஜாமின் வெளிவந்தார். இந்நிலையில் தான், அதே மாவட்டத்தில் அதிமுகவின் ஒன்றிய செயலாளர், சக கட்சி வேட்பாளர்களை கொலை மிரட்டல் விடுத்து, அதில் சிக்கியிருக்கிறார். 


தற்போது விசாரணைக்கு செல்ல வேண்டியவர், எலும்பு முறிவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்குப் பின் அவர் கைதாக வாய்ப்பு உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண