திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளும், செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனையொட்டி 4 நகராட்சிகளில் உள்ள 123 வார்டுகளில் 283 வாக்குச் சாவடிகள் உள்ளது. 10 பேரூராட்சிகளில் உள்ள 150 வார்டுகளில் 172 வாக்குச் சாவடிகளும் உட்பட்ட மொத்தம் 455 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவண்ணாமலை நகராட்சியில் மட்டும் 144 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக புதுப்பாளையம், தேசூர், பெறனமல்லூர் பேரூராட்சிகளில் தலா 12 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.



மேலும் தேர்தலில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான முதற்கட்ட தேர்தல் பயிற்சி வகுப்புகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. மேலும் இவர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நாளை நடத்தப்பட உள்ளது. அதோடு தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நகராட்சி பேரூராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்போது பாதுகாப்பான நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 455 வாக்குச்சாவடியில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல் ஏற்பாடுகள் திட்டமிட செய்யப்பட்டுள்ளது.


நட் தேர்வு விவகாரத்தில், அதிமுக இரட்டை வேடம் போடுகிறது - அமைச்சர் அன்பில் மகேஷ்



மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தி ஆன்லைனில் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பதற்றமான வாக்குசாவடிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து. திருவண்ணாமலை மாவட்டத்துக்கான தேர்தல் பொது பார்வையாளர் எம்.எஸ். சங்கீத மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.கடந்த தேர்தல்களில் வாக்குச்சாவடி கைப்பற்றுவதில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது. மோதல் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடந்து இருந்தால் அந்த வாக்குச் சாவடிகளை அதிக பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதி அந்த வாக்குச் சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Urban Localbody Election | திருவண்ணாமலை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் 1214 பேர்..


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண