சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. நல்ல சம்பளம், ஃபேமஸிற்கு ஃபேமஸ், லக்ஸூரியான வாழ்கை என இருப்பதால் சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை சினிமாவிற்கு செல்ல விரும்புகின்றனர்.


முன்பெல்லாம், சினிமாவில் நடிக்க வேண்டுமானால், தயாரிப்பாளர், இயக்குநர் அலுவலகங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்க வேண்டும். இன்றைய காலம் அப்படியல்ல, இன்ஸ்டாகிராமில் சில பல ரீல்களை தட்டி, சீரியலில் வாய்ப்பை பிடித்து, சினிமாவில் என்ட்ரி ஆவதே பலரின் திட்டமாக இருக்கிறது. அந்த வரிசையில் 3 வயதில் சன் டிவியில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிப்பரப்பான தங்கம் சீரியலில் சிறு வயது ரம்யாவாக நடித்தார் ரவீனா தாஹா 


சீன முகம் 


அதன் பிறகு நடிப்புக்கு வாய்ப்புக் கேட்டு பல திசைகளில் ஓடி அலைந்திருக்கிறார். ஆனால் அவரது முகம், சீனர்களை போல இருக்கிறது என்று சொல்லி, நிராகரித்ததாக சொல்லப்படுகிறது. 






 


விஜயின் தீவிர ரசிகை 


விஜயின் தீவிர ரசிகையான ரவீனா விஜயின் ஜில்லா, புலி உள்ளிட்ட படங்களிலும் பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியின் மெளன ராகம் சீரியலில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், முதலில் சுருதி கதாபாத்திரத்திற்காக ஆடிஷனுக்கு சென்றிருக்கிறார். அதில் அவருக்கு சக்தி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 


 






தற்போது 12 ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள ரவீனாவின் குடும்பத்தினர், அவர் இனி எப்படி படிக்கப் போகிறார் என்று கவலை அடைந்துள்ளனர். ஆனால், படிப்பிலும் சுட்டியாக இருந்து அதனையும் வெற்றிகரமாக செய்து வருகிறார். ரவீனாவிற்கு மேக் -அப் போடுவது மிகவும் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.