திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. அதையொட்டி, திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி, வந்தவாசி ஆகிய 4 நகராட்சிகளில் 123 வார்டு கவுன்சிலர்களும், செங்கம் புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு, தேசூர் ஆகிய 10 பேரூராட்சிகளில் 150 வார்டு கவுன்சிலர்களும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதையொட்டி, கடந்த மாதம் 29ம் தேதி முதல் கடந்த 4ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டது. அதில், திருவண்ணாமலை நகராட்சியில் 329 நபர்கள், ஆரணி நகராட்சியில் 198 நபர்கள், வந்தவாசி நகராட்சியில் 153 நபர்கள், செய்யாறு நகராட்சியில் 161 நபர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.


 


 




 


அதேபோல், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட, செங்கத்தில் 111 நபர்கள், சேத்துப்பட்டில் 96 நபர்கள், தேசூரில் 57 நபர்கள், களம்பூரில் 69 நபர்கள், கண்ணமங்கலத்தில் 71 நபர்கள், கீழ்பென்னாத்தூரில் 80 நபர்கள், பெரணமல்லூரில் 49 நபர்கள், போளூரில் 87 நபர்கள், புதுப்பாளையத்தில் 75 நபர்கள், வேட்டவலத்தில் 57 நபர்கள் மனுதாக்கல் செய்தனர். அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் நடந்த வேட்புமனுக்கள் பரிசீலனையில், திருவண்ணாமலை நகராட்சியில் 17, ஆரணி நகராட்சியில் 3, வந்தவாசி நகராட்சியில் 6, செய்யாறு நகராட்சியில் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதேபோல், செங்கம் பேரூராட்சியில் 1, சேத்துப்பட்டு பேரூராட்சியில் 1, களம்பூர் பேரூராட்சியில் 2, பெரணமல்லூர் பேரூராட்சியில் 1 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.


எனவே, 4 நகராட்சிகளில் 815 மனுக்கள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 747 மனுக்கள் உள்பட மொத்தம் 1,562 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இந்நிலையில், வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது. 


 




 


திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகளின் இறுதிக் கட்ட வேட்பாளர் பட்டியல்


 


அதில் திருவண்ணாமலை நகராட்சி யில்  இறுதிக்களத்தில்: 271 வேட்பாளர்கள் உள்ளனர். ஆரணி நகராட்சியில் இறுதிக் களத்தில் ; 130 வேட்பாளர்கள் உள்ளனர். வந்தவாசி நகராட்சியில் இறுதிக் களத்தில்; 117 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். திருவத்திபுரம் நகராட்சியில் இறுதிக் காலத்தில்; 113 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மூன்று நகராட்சிகளிலும் மொத்தமாக 651 வேட்பாளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட 4 நகராட்சிகளில் 164 வேட்பாளர்கள் வேட்புமனு வாப்பஸ் பெற்றுள்ளனர்


திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 பேரூராட்சிகள் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல்


செங்கம் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 87 வேட்பாளர்கள் உள்ளனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 70 வேட்பாளர்கள் உள்ளனர். தேசூர் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 43 வேட்பாளர்கள் உள்ளனர். களம்பூர் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 55 வேட்பாளர்கள் உள்ளனர். கண்ணமங்கலம் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 42 வேட்பாளர்கள் உள்ளனர். கீழ்பெண்ணாத்தூர் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 64 வேட்பாளர்கள் உள்ளனர். பெரணமல்லூர் பேரூராட்சியில் இறுதிக் களத்தில்; 44 வேட்பாளர்கள் உள்ளனர். போளூர் பேரூராட்சியில் இறுதி காலத்தில்; 55 வேட்பாளர்கள் உள்ளனர்.  புதுப்பாளையம் பேரூராட்சியில் இறுதிக்காலத்தில்; 52 வேட்பாளர்கள் உள்ளனர். வேட்டவலம் பேரூராட்சியில் இறுதிக் காலத்தில்; 51 வேட்பாளர்கள் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் 343 நபர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்று உள்ளனர் இதில்1214 வேட்பாளர்கள் களம் காண உள்ளனர். மேலும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு 30 சின்னங்களை மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.