இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 ஒரு நாள் போட்டிகள் மட்டும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. அதனை அடுத்து, நாளை நடக்க இருக்கும் இரண்டாவது ஒரு நாள் போட்டிக்கு முன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அணி. 


இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு நாள் தொடரில் முன்னிலை பெறுவதோடு தொடரையும் கைப்பற்றும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல் ராகுல் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக குணமடைந்து வரும் நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக அக்சர் படேல் டி20 போட்டிகளில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


நேற்று முதல் பயிற்சியை தொடங்கி இருக்கும் இந்திய அணி வீரர்களுடன், கே.எல் ராகுல், மயங்க் அகர்வால், சைனி ஆகியோர் இணைந்துள்ளனர். இந்நிலையில், பிசிசிஐ சார்பில் பயிற்சி வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பவுலிங் செய்வது போன்ற வீடியோ இடம் பெற்றுள்ளது. 1999-ம் ஆண்டு, பிப்ரவரி 7-ம் தேதி அன்று, டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் கும்ப்ளே. இந்த சாதனையை நினைவு கூறும் வகையில், நேற்று நடைபெற்ற பயிற்சியின்போது டிராவிட் பவுலிங் செய்ததாக பிசிசிஐ கேப்ஷன் எழுதி வீடியோவை பகிர்ந்துள்ளது. இது இப்போது வைரலாகி வருகிறது. 


வீடியோவைக் காண:






ஒருநாள் தொடருக்கான இந்திய அணி விவரம்:


ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், ஷர்துல் தாக்கூர், சாஹல், குல்தீப் யாதவ் , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான்.


ஒரு நாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்


பொல்லார்ட் (கேப்டன்), ஃபேபியன் ஆலன், போனர், டேரன் ப்ராவோ, ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹோப், ஹெசெயின், ஜோசஃப், பிராண்டன் கிங், பூரன், கீமர் ரோச், செஃபெர்ட், ஸ்மித், வல்ஷ் ஜூனியர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண