இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழ்நாடு உட்பட  சில மாநிலங்களில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலானது கேரளா மாநிலம், கர்நாடகா மாநிலம் உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை  நடக்கிறது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிராசாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதனால் இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டனர். இந்தியாவில் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் கடந்த 19 ஆம் தேதி 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது.


Greece: ஆரஞ்சு நிறமாக மாறிய கிரீஸ் நாடு.. பதறிய மக்கள்.. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் நாசாவின் விளக்கம்!




இதில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 65.54 சதவிகித வாக்குகள் பதிவாகின. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிராசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைபெற்றது.


Billa Re - release : அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பர்த்டே ட்ரீட்! விஜய்யின் கில்லியை தொடர்ந்து அஜித்தின் பில்லா ரீ ரிலீஸ்...




Sachin NOT OUT: கோலி அவுட்டா..? இல்லையா..? சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின் தெரியுமா?


இதனைதொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மாலை 5 மணிக்கு மேல் வெளிநபர்கள் தொகுதியில் தங்க அனுமதி கிடையாது என்றும், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை 26 ஆம் தேதி நடைபெறயிருப்பதால் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும், தேர்தல் ஆணையம் தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.