திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக இருந்த 28 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 15 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது . இதில் மொத்தம் உள்ள 32 ஆயிரத்து 28 வாக்காளர்களில் , 21 ஆயிரத்து 21 பேர் மட்டுமே வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 65.63% சதவீதம் வாக்குகள் பதிவானது. மாவட்டத்தில் நிலக்கோட்டை, பழனி உள்ளிட்ட இரண்டு ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி திமுக வசம் சென்றுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சியானது ஆசியாவிலேயே மிக பெரிய மூன்றாவது ஊராட்சியாக உள்ளது இந்த ஊராட்சிக்கு உட்பட்டு 10க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இந்த வில்பட்டி ஊராட்சி பகுதியில் மொத்தம் 12,260 வாக்காளர்கள் உள்ளன இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த ஊராட்சியில் இடைத்தேர்தல் நடை பெற்றது.
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இதில் 6,846 வாக்குகள் பதிவாகியுள்ளன இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்றது. இதில் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தை சேர்ந்த 23 வயதான பாக்கிய லட்சுமி என்ற இளம்பெண் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 2,312 வாக்குகள் வித்தியாசத்தில் 4,034 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கொடைக்கானல் மலை பகுதிகளில் முதன் முறையாக இளம்வயதில் தேர்தலில் போட்டியிட்டு ஊராட்சி மன்ற தலைவராக வெற்றி பெற்றது இதுவே முதன் முறையாகும். இளம்வயதிலேயே ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கிய லட்சுமிக்கு பல்வேறு தரப்பு மக்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பாக்கியலெட்சுமி திமுக ஆதரவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் ஒன்றிய கவுன்சிலர்களின் தேர்தல் முடிவு தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
தேனியில் மாவோயிஸ்டுகள் வீடுகளில் சோதனை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,