திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுது. திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக இருந்த 28 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 15 பேர் போட்டியின்றி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 13 பதவிகளுக்கு கடந்த 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது . இதில் மொத்தம் உள்ள 32 ஆயிரத்து 28 வாக்காளர்களில் , 21 ஆயிரத்து 21 பேர் மட்டுமே வாக்களித்தனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 65.63% சதவீதம் வாக்குகள் பதிவானது. திண்டுக்கல், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உட்பட ஒன்பது பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கிய நிலையில்,
பழனி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் முடிவில் திமுக வேட்பாளர் ராமராஜ் 2469 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியக்குழுவின் 11வது வார்டு உறுப்பினராக இருந்த ரமேஷ் என்பவர் உடல்நலக்கோளாறு காரணமாக உயிரிழந்ததை அடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 9ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மணிகண்டன், திமுக சார்பில் ராமராஜ், அமமுக சார்பில் முருகவேல் மற்றும் சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் என 4வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் 11வது வார்டுக்கு உட்பட்ட ஆண்டிபட்டி, குப்பம்பாளையம், நரிப்பாறை, குதிரையாறு அணை ஆகிய பகுதிகளில் 8வாக்குச்சாவடிகளில் மொத்தமுள்ள 5459வாக்குகளில் மொத்தம் 3979வாக்குகள் பதிவாகின. பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் ராமராஜ் 2990வாக்குகள் பெற்று 2469வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மணிகண்டன் 521வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் 13-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 723 - வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிபெற்றது. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 13வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கான நடைபெற்ற இடைத்தேர்தலில் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை 3- சுற்றுகளாக நடைபெற்றது. மொத்த வாக்குகள் 5216 இருந்த நிலையில், பதிவான வாக்கு எண்ணிக்கைகள் 4190 இருந்தன. இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட தியாகு 2362 வாக்குகள் பெற்று இவரை எதிர்த்து போட்டியிட்ட போட்டியாளர்களை விட 723 - வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
லோயர்கேம் -மதுரை கூட்டு குடி நீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
மதுரைக்கு குடிநீர் எடுத்து செல்வதை எதிர்ப்பு தெரிவித்து தேனியில் விவசாயிகள் போராட்டம்
அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
.