தமிழகத்தின் தேனி ,ராமநாதபுரம் ,மதுரை ,கோவை ,சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில்   NIA போலீசார் சோதனை நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரம் , பெரியகுளம் அருகே உள்ள  எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியில் தேசிய புலனாய்வு முகமை(NIA)போலீசார் சோதனை மேற்கொண்டனர்.




2007 ஆம் ஆண்டு பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் வேல்முருகன், ஈஸ்வரன் முத்துச்செல்வம், பழனிவேல் ஆகிய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டனர். 2010ஆம் ஆண்டு வேல்முருகன் நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் தலைமறைவானார். இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கேரள தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும் நக்சல் அமைப்பினருக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வேல்முருகன் பலியானார்.




இந்நிலையில் இன்று  நக்சல் அமைப்பினர் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்ட வழக்கில் கைதான பெரியகுளம் அருகே உள்ள எண்டபுளி ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகரில் உள்ள வேல்முருகன் இல்லத்திலும், உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைப்புரம் பகுதியில் உள்ள ஈஸ்வரன் என்பவர் வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமையின்(NIA) அதிகாரிகள்நேற்று காலை 8 மணி முதல் சோதனை மேற்கொண்டனர். பெரியகுளத்தில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரி சசிரேகா ஆய்வாளர் தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையானது இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்த சோதனையின்போது பெரியகுளம் வருவாய் துறை அதிகாரிகள்  நக்சல் தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் உடனிருந்தனர். 


ஆய்வுக்கு பின் அதிகாரிகள் அங்கிருந்து சென்ற நிலையில் உத்தமபாளையம் அருகே உள்ள பண்ணைபுரத்திலும் ஈஸ்வரன் என்பவரது வீட்டில் சோதனை செய்தனர். ஈஸ்வரன் வீட்டில், தேசிய புலனாய்வு முகமையின் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் சோதனை செய்தனர். ஈஸ்வரன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பே வீட்டை விட்டு சென்றது தெரிவந்தது. தற்போது அவரது அம்மா    மட்டுமே இருந்த  நிலையில் வீட்டில் சுமார் 5 மணி நேரம் மேற்க்கொண்ட விசாரணையில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.




இந்த ஆய்வானது நக்சல் அமைப்பினரின் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.  தேனி மாவட்டத்தில் பெரியகுளம் மற்றும் பண்ணைபுரம் பகுதியில் நக்சல் தொடர்பில் இருந்து கைதானவர்களின் வீடுகளில் திடீரென தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து என் .ஐ .ஏ போலீசார் கூறுகையில் , தடை செய்யப்பட்ட  மாவோயிஸ்ட்  இயக்கத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.


 


அரசு நிலங்களை முறைகேடாக பட்டா போட்ட அதிமுக பிரமுகர் தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,


ABP Nadu Exclusive: ஓபிஎஸ்., கோட்டையில் நீக்கப்பட்ட அதிமுக ஒன்றிய செயலாளர்... தேனியை கூறு போட்டது அம்பலம்!