மத்திய அரசு தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸஸ் முதல்நிலைத் தேர்வு (Prelims Exam) இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக இருக்கிறது. இவற்றை யுபிஎஸ்சி இணையளத்தில் http//www.upsc.gov.in காணலாம். 2021 அக்டோபர் 5-ம் தேதி நடைபெற்ற குடிமைப்பணிகளுக்கான (முதல் நிலை) தேர்வு முடிவின் அடிப்படையில் குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு எழுத மாணவர்கள் தகுதி பெறுகின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வு விதிமுறையில் கூறப்பட்டுள்ளபடி, முதல்நிலைத் தேர்வில் தகுதி பெற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும் விரிவான விண்ணப்பப்படிவம் 1-ன் வாயிலாக குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப்படிவங்கள் மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில்((https://upsconline.nic.in)) இடம்பெற்றிருக்கும்.
அனைத்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்களும் 07/01/2021 வெள்ளிக்கிழமை முதல் நடைபெற உள்ள குடிமைப்பணிகளுக்கான (முதன்மை) தேர்வு 2022-அனுமதிக்காக விரிவான விண்ணப்ப படிவங்களை ஆன்லைனில் பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். விரிவான விண்ணப்பப்படிவங்களை பூர்த்தி செய்வதற்கான முக்கியமான அறிவுறுத்தல்கள் அதனை சமர்பிப்பதற்கான விவரங்கள் இணையதளத்தின் வாயிலாக காணலாம்.
டினா தாபியின் தங்கை ரியா தாபி யுபிஎஸ்சி தேர்வுகளில் இந்திய அளவில் முதலிடம்!
வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் விரிவான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்யும் முன்பாக, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் உரிய பக்கத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், 24/03/2021 தேதியிட்டு வெளியிடப்பட்ட பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் இந்திய அரசிதழில்(அசாதாரண) பிரசுரிக்கப்பட்ட குடிமைப்பணிகள் தேர்வுகள் 2021-ன் விதிகளை சரிபார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும், வாசிக்க:
Puneeth Rajkumar Death: புனீத் ராஜ்குமார் மரணம் : நேரலையில் கண்ணீர்விட்டு கதறிய செய்தி வாசிப்பாளர்..