தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கான உளவியல் ரீதியான குழப்பங்களையும் தேர்வு சார்ந்த அச்சத்தையும் போக்கும் வகையில் ”மனமே மாணவர்கள் நலம், மாணவர் நலமே மக்கள் நலமே” என்ற தலைப்பில் சிறப்பு உளவியல் கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த கருத்துரங்கில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். மதுரையிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உளவியல் மற்றும் மனநல மருத்துவர்கள் கண்ணன் மற்றும் குரு பாரதி மாணவ, மாணவியர்களுக்கு உளவியல் ரீதியான சிறப்பு கருத்துக்களை தெளிவாக விளக்கினர். மாணவர்களை மதிப்பெண் குவிக்கும் மெஷின்களாக கருதாதீர்கள் என்றும், உங்கள் குழந்தைகள் மீது கருத்துக்களை வலியுறுத்தாமல் அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளியுங்கள் என்றும் கூறினர்.
மேலும், சுயநிதி கல்லூரி எல்லாம் சுயநலக் கல்லூரி ஆக மாறி வருகிறது என்றும், உங்களது குழந்தைகளின் ஆர்வத்திற்கு மதிப்பளியுங்கள் என்றும், உங்களது எதிர்பார்ப்புகளை அவர்கள் மீது வலியுறுத்தாதீர்கள் என்றும் கூறினர். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் சர்வே படி நான்கு நபர்களில் ஒருவர் மன அழுத்தம் மற்றும் மனச் சிதைவுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினர்.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றது போல இந்த முறையும் எதிர்பாராமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார். பெற்றோர்கள் மாணவர்களிடம் நட்பாகவும் அன்பாகவும் பழகி குழந்தைகளை மதிப்பெண் வாங்கும் மிஷினாக கருதாமல், மாணவருடைய குற்ற உணர்வுகளை சுட்டிக்காட்டாமல் மனம் விட்டு பேசி மனோதிடம் மிக்க குழந்தையாக உருவாக்குங்கள் என்று கூறினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்