இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (Indian Space Research Organisation, ISRO) பள்ளி மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி பயிற்சித் திட்டத்தை (Young Scientist Programme ) அறிவித்துள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள் இன்று (மார்ச் 20) முதல் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 


யுவிகா (YUVIKA) பயிற்சி திட்டம் 2023


பள்ளி மாணவர்களிடம் படிப்போடு,விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இஸ்ரோ கடந்த 2019-ல் அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது. விண்வெளி அறிவியல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இளம் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தனியாக 5 கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இதற்கு விண்ணபிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




எப்படி விண்ணப்பிபது?


https://www.isro.gov.in/- என்ற இஸ்ரோவின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். முகப்பு பக்கத்தில் உள்ள  இந்த ஆண்டுக்கான ‘யுவிகா’ பயிற்சி என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 


வரும் மே 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. . இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (மார்ச் 20) தொடங்கி, ஏப்ரல்-3-ம் தேதி வரை நடைபெறும். 


பயிற்சிக்குத் தேர்வாகும் மாணவர்களின் தற்காலிகப் பட்டியல் ஏப்ரல், 10-ம் தேதி வெளியிடப்படும். அவர்கள், தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதிப்பட்டியல் ஏப்ரல். 20-ம் தேதி வெளியாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது தேர்வாகும் மாணவர்களுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி அளிக்கப்படும்.




ஆன்லைனில் விண்ணப்பிக்க https://jigyasa.iirs.gov.in/yuvika- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


முக்கிய தேதிகள்:




விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2023




மேலும் வாசிக்க..


TN Budget 2023: மக்களே உங்களுக்காக... தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு ரூபாய்க்குமான வரவு- செலவு கையேடு இதுதான்!


TN Budget 2023: பழைய ஓய்வூதியத்‌ திட்டம், அரசு காலியிடங்கள் நிரப்பும் அறிவிப்பு எங்கே?- தலைமைச்‌ செயலக சங்கம்‌ கடும்‌ அதிருப்தி