சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திதார் அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டில் உள்ள பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை  சென்ற ஆண்டுகளில் 21000-ஆக இருந்த நிலையில்  இந்த ஆண்டு இதுவரை 31000 பேர் சேர்ந்துள்ளனர். இன்னும் மூன்றாவது மற்றும் நான்காவது கட்ட மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் காலி இடங்கள் இருக்கும் நிலை இருக்காது. அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி  படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவிகித இட ஒதுக்கீடு எந்த பல்கலை கழகத்திலும் பின்பற்றபடாது.



பயோடேக்னாலஜி படிப்புக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் உதவி தொகையை வழங்க மத்திய உயர்கல்வி துறை அமைச்சகத்துக்கு முதல்வர் விரைவில் கடிதம் எழுத உள்ளார். மத்திய அரசு உதவி தொகை வழங்கினாலும் வழங்காவிட்டால் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின் படியே மாணவர் சேர்க்கை நடைபெறும். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் இதுவரை 5970 பேர் சேர்ந்துள்ளனர். அடுத்த கட்ட கலந்தாய்வுகள் மூலமாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும் கல்வி கட்டணம் விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த இட ஒதுக்கீட்டில் சேர கூடிய மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் , கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ராமேஸ்வரம்: பாம்பன் இந்திரா காந்தி சாலை பாலத்துக்கு இன்றுடன் வயது 34...!



இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*

வரும் காலத்திலும் தமிழகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு வழங்க வாய்ப்பில்லை... பொறியியல் படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் 25-ஆம் தேதி தொடங்கும். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்பதால் 3443 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் என அறிவிதிருந்த நிலையில் கௌரவ விரிவுரையாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்” என்றார்.