அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் தேர்வில் தாமதமாக விடைத்தாள் பதிவேற்றம் செய்த 10,000 மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


கொரோனா தொற்று பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஆன்லைனில் தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்பட்டன. தேர்வு எழுதுபவர்கள் தங்களது விடைத்தாள்களை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.


Child labour: வறுமையிலும் வழிகாட்டிய தீரம்.. 19 குழந்தைத் தொழிலாளர்களைத் தனியாளாக மீட்ட 16 வயது மாணவி!


இந்த நிலையில், ஆன்லைனில் தேர்வு நடைபெற்ற தேர்வில் தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்த மாணவர்களுக்கு ஆப்சென்ட் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்சென்ட் வழங்குமாறு விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. தாமதமாக பதிவேற்றம் செய்திருந்த மாணவர்களின் விடைத்தாளை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Bhagavad Gita: பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகம் செய்யத் திட்டம்- கர்நாடக முதல்வர் அறிவிப்பு


விடைத்தாள் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதாக விளக்கமளித்த அண்ணா பல்கலைக்கழகம், உரிய கால அவகாசம் வழங்கியும் விடைத்தாள்களை பதிவேற்றம் செய்யாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் என்று குறிப்பிட்டுதான் முடிவுகள் வெளியாகும் எனவும் கூறியுள்ளது. மேலும், மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து ஆலோசிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் துணை வேந்தர் கூறியுள்ளார்.


10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதனால், அவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆப்சென்ட் எனக் குறிக்கப்பட்ட மாணவர்கள் மீண்டும் தேர்வில் கலந்துகொள்ளும்படி அழைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.


இந்த நிலையில், தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


மாணவர்கள் ஆன்லைன் தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவிப்பு வெளியிட்டார். வழக்கமாக நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்த ஆண்டு ஜனவரிக்கு தள்ளிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


UGC on PhD: இனி முதுகலை படிக்காமலேயே பிஎச்.டி. சேரலாம்; நுழைவுத் தேர்வு கட்டாயம்- யுஜிசி அதிரடி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண