பள்ளிகளில் பகவத் கீதையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகக் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தில்  அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


பாஜக ஆளும் மாநிலமான குஜராத்தில் அண்மையில், பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை ஓர் அங்கமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 2022- 23ஆம் கல்வி ஆண்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களில் கீதை இருக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது. 


இந்த சூழலில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இன்று (சனிக்கிழமை) பகவத் கீதையை அமல்படுத்துவது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசும்போது, ''குஜராத்தில் கீதை அமலாகி உள்ளது. நம்முடைய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை என்ன மாதிரியான திட்டங்களுடன் வருகிறது என்று பார்ப்போம்.


பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஒழுக்க நெறிகளை வழங்குவதே எங்களின் நோக்கம். பேச்சுவார்த்தைக்குப் பிறகே விவரங்களைத் தெரிவிப்போம்'' என்று தெரிவித்தார். 


பகவத் கீதை குழந்தைகளுக்கு ஒழுக்க நெறிகளைக் கற்பிக்குமா என்று கேட்டதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ''வேறு என்ன? நீங்களே சொல்லுங்கள். பகவத் கீதை இல்லையென்றால் வேறு எது ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கிறது?'' என்று பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.


இந்நிலையில் கர்நாடகப் பள்ளிகளில் விரைவில் பகவத் கீதை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


*


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண