தமிழ்நாடு அரசின் குடிமைப் பணி பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு உதவித் தொகையுடன் பயிற்சி பெற இன்று மாலைக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று அகில இந்திய குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து, வெளியடப்பட்ட செய்திக் குறிப்பில், " 


மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட அகில இந்திய குடிமைப் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் (பிரிலிம்ஸ்) வெற்றி பெற்ற அனைவரையும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம் வாழ்த்துகிறது.


சென்னையில் உள்ள பசுமைவழிச் சாலையில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையம், கடந்த 56 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், தமிழக இளைஞர்களுக்குக் குறிப்பாகக் கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வருகிறது. ஆண்டுதோறும் குடிமைப் பணித் தேர்வுகளில் உயர்நிலையினை வெற்றி அடையும் பெற்று இந்திய நிர்வாகத்தில் வகையில், இங்குப் பயிலும் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படுகிறது.


இப்பயிற்சி மையத்தில் பசுமைச் சூழலுடன் வகுப்பறைகள், தங்கும் இடவசதி, தரமான உணவு வழங்கும் விடுதி,சிறந்த நூலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளன. மாணவர்களுக்கு இங்குக் கட்டணமின்றி உணவு அருந்தவும்,அருமையான இயற்கைச் சூழலில் தங்கிப் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதுடன், மாணவர்கள் தங்களை முதன்மைத் தேர்விற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளும் வகையில் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுதவிர, முதன்மைத் தேர்வு (மெயின்ஸ்) எழுதும் தேர்வர்களுக்கு மாதம் ரூபாய் மூன்றாயிரம் (ரூ.3000/-) ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.


தமிழக மாணவர்கள் எங்குப் பயிற்சி பெற்று முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்தப் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள். இந்த மையத்தில், இந்த ஆண்டு (2021), 225 பேர் தங்கிப் பயிலச் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேர விரும்பும் தேர்வர்கள் 03ம் தேதி    ( நாளை -புதன்கிழமை) மாலை 6.00 மணி முதல் 7ம் தேதி   (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.00 மணி வரையில் "www.civilservicecoaching.com" என்ற இணையத்தில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 


இட ஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம், 9ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 06.00 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு. 10 (புதன்கிழமை) இல் சேர்க்கை நடைபெறுவதோடு 11ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும். இணையத்தில் பதிவு மேற்கொள்ளும் மாணவர்கள்,விண்ணப்பத்தில்குறிப்பிட்டுள்ளபடி. வருமானச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமானச் சான்றிதழினைக் குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் சேரும்போது ஒப்படைக்க வேண்டும். பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட / பட்டியலினத் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.


அரசு விதிகளுக்குட்பட்டுப் பதிவு செய்தவர்களில் 225 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப் பணி முதன்மைத் தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளார்கள் என்பதைத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண 


மேலும், வாசிக்க:


"நம்பிக்கையோடு தடைகளை கடந்து வர வேண்டும்" - ஐஏஎஸ் தேர்வில் முதலிடம் பிடித்த தென்காசி மாணவி!


UPSC Result 2020: 'என் குறைகளை பார்த்தவர்களிடம் திறமையை காட்ட நினைத்தேன்’ UPSC தேர்வில் வென்ற மாற்றுத்திறனாளி ரஞ்சித்..!