தற்போது வெளியாகியுள்ள ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங்கில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.


 ஐசிசி தரவரிசைப் பட்டியல்:


டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் பட்டியலில் இந்திய அணி வீரர்கள் தலா இரண்டு பேர் இடம்பிடித்துள்ளனர். பேட்டிங் தரவரிசையைப் பொறுத்த வரை 754 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 8வது இடத்தையும், 742 புள்ளிகளுடன் விராட் கோலி பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர். 


டெஸ்ட் பேட்டிங் தரவரிசை:


மொத்தமாகவே 4 டெஸ்ட் போட்டிகளில் தான் இந்திய அணி விளையாடியுள்ளது. ஜனவரி மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடக்க ஆட்டக்காரும் தற்போதைய கேப்டனுமான ரோகித் ஷர்மா  விளையாடவில்லை.  முதலாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் விராட் கோலி விளையாடினார். அந்த தொடரில் 2ல் தென்னாப்பிரிக்காவும், 1ல் இந்தியாவும் வெற்றிபெற்றன. இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விராட் கோலியும், புதிய கேப்டனான ரோகித் ஷர்மாவும் விளையாடினர். இரண்டு போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.


ஜூலை 1ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டி தவிர இந்த ஆண்டுக்கான டெஸ்ட் போட்டிகள் முடிவடைகின்றன. இதுவரை நடைபெற்றுள்ள 5 டெஸ்ட் போட்டிகளில் 4ல் விராட் கோலியும், 2ல் ரோகித் ஷர்மாவும் விளையாடியுள்ளனர். இந்த போட்டிகளில் இருவருமே பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் தரவரிசைப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஒருகாலத்தில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலாமிடத்தில் நீண்ட காலத்திற்கு இருந்த விராட் கோலி கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



 


டெஸ்ட் பந்துவீச்சு பட்டியல்:


பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினும், வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர். இப்பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது. முதலிடத்தில் 901 புள்ளிகளுடன் பேட் கம்மின்சும், 6வது இடத்தில் ஜேமிஸன், 8வது இடத்தில் வேக்னர், 9வது இடத்தில் ட்ரெண்ட் போல்ட், 10வது இடத்தில் ஹஸல்வுட் என்று 5 பேர் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அஃப்ரிடி 4வது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் ரபடா 5வது இடத்திலும் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 7வது இடத்திலும் உள்ளனர்.


 




ஆல்ரவுண்டர்கள் பட்டியல்:


இந்திய அணயின் மூத்த வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் சமீபகாலங்களாக ஓரம் கட்டப்பட்ட நிலையிலும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தன்னை நிரூபித்திருக்கிறார். அதே போல ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் 385 புள்ளிகளுடன் அசைக்க முடியாத இடத்தில் ரவீந்திர ஜடேஜா நீடிக்கிறார். ஜடேஜா முதலிடத்திலும், அஷ்வின் 341 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளனர். அதே போல ஜேஸன் ஹோல்டர் 3வது இடத்திலும், ஷாகிப் அல் ஹசன் 4வது இடத்திலும்ம், இங்கிலாந்து வீரர் க்றிஸ் வோக்ஸ் 9வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்சல் ஸ்டார்க் 6வது இடத்திலும், பேட் கம்மின்ஸ் 7வது இடத்திலும், காலின் 8வது இடத்திலும், ஜாமிசன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.