தன் கணவர் பெண்ணாக இருந்து ஆணாக மாறிய உண்மையை திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப்  பிறகு பெண் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.


குஜராத் மாநிலம், வதோதரவைச் சேர்ந்த ஷீத்தல் எனும் 40 வயது பெண், தன்னைத் திருமணம் செய்து கொண்டவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்பதை திருமணமாகி 8 ஆண்டுகளுக்குப் பின் கண்டறிந்துள்ளார்.


இவரது கணவரும் மருத்துவருமான விராஜ் வரதன் எனும் இந்நபர் பெண்ணாக இருந்தபோது விஜய்தா எனும் பெயரால் அறியப்பட்டுள்ளார். தொடர்ந்து பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய அவர், இந்த உண்மையை மறைத்து ஷீத்தலுடன் புதிய வாழ்வைத் தொடங்கியுள்ளார்.


அதன்படி, திருமணமாகி 14 வயதுடைய மகளைக் கொண்ட ஷீத்தலை 9 ஆண்டுகளுக்கு முன் மேட்ரிமோனியல் தளத்தின் வாயிலாக சந்தித்து திருமணம் செய்துள்ளார்.


ஷீத்தலின் கணவர் 2011ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்த நிலையில், 2014ஆம் ஆண்டு இவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். தொடர்ந்து இருவரும் தங்கள் தேனிலவுக்காக காஷ்மீர் சென்றபோதும் இருவரும் உடலுறவில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.


மேலும், அந்த நபர் பல நாள்கள் சாக்குபோக்கி சொல்லி உடலுறவு கொள்வதைத் தவிர்ந்து வந்த நிலையில், ரஷ்யாவில் தான் இருந்தபோது ஏற்பட்ட விபத்தால் தன்னால் உடலுறவு கொள்ள முடியவில்லை என விராஜ் வரதன் கூறியதாக ஷீத்தல் தெரிவித்துள்ளார்.






மேலும் சிறு அறுவை சிகிச்சை செய்தால் தன் பிரச்னை தீர்ந்துவிடும் எனக்கூறி, ஷீத்தலை ஏமாற்றி விராஜ் 2020ஆம் ஆண்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாவும் கூறப்படுகிறது.


இந்நிலையில் தன்னிடம் இவற்றையெல்லாம் மறைத்தும், இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்ளத் தொடங்கியதாகவும் முன்னதாக ஷீத்தல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மேலும் இவ்வாறு உடலுறவு கொள்வது குறித்து வேறு எவரிடமும் தெரிவிக்கக்கூடாது என தன்னை மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ள ஷீத்தல், தன் பெயரில் கணவர் 90 லட்சம் கடன் பெற்று வீடு வாங்கியுள்ளதாகவும் வேதனைத் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் முன்னதாக குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்த காவல் துறையினர் அவரை வதோதராவிலிருந்து டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஷீத்தல் தன் கணவரின் குடும்பத்தார் மீதும் புகார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!


Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...