ரேஷன் அரிசியை வாங்கி உண்பதற்கு பயன்படுத்தாதவர்கள் அதனை வாங்காதீர்கள் என பொதுமக்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தமிழக அரசின் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுடன் தமிழக அரசின் நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசி உற்பத்தி செய்யப்படுவதை VKB நவீன அரிசி ஆலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தார். அவரிடம் உற்பத்தி செலவு அதிகரிப்பதால் தமிழ்நாடு அரிசி சங்க மாநில தலைவர் துளசிங்கம் கோபி அரிசிஆலை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு மூட்டை ஒன்றுக்கு அரசு அரிசி உற்பத்தி செய்து தர 40 ரூபாய் அரவை கூலி வழங்கி வரும் நிலையில் 100 ரூபாய் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
பின்னர் அங்குள்ள மருதம் பல்பொருள் அங்காடி மற்றும் மேலாண்மை பயிற்சி வகுப்புகளை பார்வையிட்டுஆய்வு செய்த அவர் மருதம் பல்பொருள் அங்காடியில் விற்கப்படும் பொருள்களின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர் ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ராஜாமணி அரிசி ஆலையை ஆங்காடு பகுதியில் ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரேசன் அரசியை மெருகேற்றி கடத்தலில் ஈடுபட்ட வழக்கில் தொடர்புடைய சக்கரவர்த்தியை தேடி வருவதாகவும் சுமார் 100 டன் ரேசன் அரிசி 3500 கிலோ கோதுமை கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை போகும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் பெரும் கடத்தல்காரர்களை கைது செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலில் இதுவரை 11, ஆயிரத்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குண்டர் சட்டத்தில் 113 பேரை சிறையில் அடைத்துள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்டத்தில் 2962 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதில் 63 பேரை கைது செய்துள்ளதாகவும் எட்டு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ரேஷன் அரிசியை வாங்கி பயன்படுத்தாத பொதுமக்கள் அதை சிறு வியாபாரிகள் கடைகளுக்கு விற்கக் கூடாது என்றும், நல்ல திட்டத்தை முறையாக பொதுமக்கள் செயல்படுத்த உதவ வேண்டும் அரிசியை உண்ண விரும்பாதவர்கள் அதனை வாங்க வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்தார்.
வருவாய்த்துறை கூட்டுறவுத்துறை உணவு பாதுகாப்புத்துறை காவல் துறை ஆகியோருடன் இணைந்து ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்த அவர், பின்னர் அங்குள்ள அரசு நியாய விலை கடையில் பொருட்கள் விநியோகம் குறித்து ஆய்வு செய்து, வயதான முதியவர்களுக்கு வீடுகளுக்கே நேரில் சென்று பொருட்களை பதிவு முறையில் முறையாக வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.