திருவனந்தபுரம் அருகே உள்ள விளப்பில் சாலை என்ற பகுதியை சேர்ந்தவர் சிவபிரசாத் (வயது 34). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவருக்கு ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால், ரேவதிக்கும், நெடுமங்காடு பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது.


இது சிவபிரசாத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து சிவபிரசாத் தனது மனைவியை பல முறை கண்டித்துள்ளார். ஆனாலும் விஷ்ணுவுடனான தொடர்பை ரேவதி நிறுத்தவில்லை. அதுமட்டுமின்றி ரேவதியும், விஷ்ணுவும் நெருக்கமாக இருக்கும் காணொலி காட்சி சிவபிரசாத் வாட்ஸ் அப்பிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


Watch Video: திருப்பதியில் வெள்ளம்: திருமலை சாலைகள் மூடல்; வெள்ளத்தில் பக்தர் அடித்துச் செல்லும் அதிர்ச்சி காட்சி!


இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிவபிரசாத் கடந்த 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தனது சாவுக்கு மனைவி ரேவதியும், விஷ்ணுவும்தான் காரணம் என எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக விளப்பில் சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து ரேவதியும், விஷ்ணுவும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை காவல் துறையினர் இரண்டு வருடங்களாக தேடிவந்தனர்.


வெள்ளக்காடாக மாறிய புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம்; இயல்பு வாழ்க்கை முடக்கம்


இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி எர்ணாகுளத்தில் வைத்து விஷ்ணுவை காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் ரேவதி தொடர்ந்து போலீஸிடம் சிக்காமல் இருந்தார்.


இச்சூழலில் நேற்று முன் தினம் ரேவதி  ஸ்ரீகாரியத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: MK Stalin New Car: சொகுசு காரில் வெள்ளத்தை பார்வையிடும் முதல்வர் ஸ்டாலின்: அப்படி என்ன இருக்கு அந்த காரில்?


கள்ளக்குறிச்சியில் கைதான சக்திவேல்: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி!


VIRAL PHOTO | பின்னிப் பிணைந்திருக்கும் மூன்று நாகப் பாம்புகள்.. இணையத்தில் பரவும் வைரல் படம்!


Lunar Eclipse 2021: 580 ஆண்டுகளுக்கு பிறகு நாளை அரிய சந்திர கிரகணம்.. தமிழ்நாட்டில் தெரியுமா?