ஜெய்பீம் படத்தில் வரும் காட்சிகளை போல் தற்போது கள்ளக்குறிச்சி அருகே ஒரு உண்மை சம்பவம் அரங்கேறியுள்ளது இந்த சம்பவத்தில் 5 குறவர்களை சிறப்பு அதிரடி போலீசார் என இரவில் வீடு புகுந்து கதவை உடைத்து கடத்திச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி புவனேஸ்வரி புகார் அளித்தார், இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுதியது இந்த சம்பவம். மேலும் இந்த சம்பவம் பேசு பொருளாகிய நிலையில் பட்டியலினத்தைச் சேர்ந்த மூவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி ஏற்படுத்தியது.




கைது செய்யப்பட்ட சக்திவேல் தற்போது நெஞ்சுவலி காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை:


மேலும் இதில் கைது செய்யப்பட்ட சக்திவேல் தற்போது நெஞ்சுவலி காரணமாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மனைவி கஸ்தூரியிடம் கேட்டபோது சக்திவேலை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்று, வீட்டிற்கு வந்த காவலர்கள் சக்திவேலை அடித்து  கையை பின்பக்கமாக கட்டி ஜீப்பில் அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் சக்திவேல் கைது செய்த பின்பு சக்திவேலை சிறைச்சாலையில் சென்று பார்க்கும்போது சக்திவேல் எந்த ஒரு உணர்வும் இன்றி மயக்கத்தில் இருந்ததாக அவரது மனைவி கூறினார். இந்த நிலையில் நேற்று இரவு சக்திவேலின் மனைவிக்கு ஜெயிலர் தொடர்பு கொண்டு சக்திவேலின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சின்னசேலம் காவல்துறையினர் வருவதாகவும் மேலும் சக்திவேலுக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட உள்ளதாக  தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் அராஜகப் போக்கல்  அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சக்திவேல் நெஞ்சுவலி வலி காரணமாக சிகிச்சை பெற்று வருவது அதிர்ச்சியை எற்படுதியுள்ளது.




இந்த சம்பவம் குறித்த முழு விபரம் :


கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கீழ்க்குப்பம் மற்றும் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் வில் ஈடுபட்டதாக  குறவர்கள் மூவர் கைது என கள்ளக்குறிச்சி காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.இது குறித்து காவல் துறையினர் வெளியிட்ட பத்திரிகை செய்தி அறிக்கையில், "கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி அன்று பெரிய சிறுவத்தூர் ரயில்வே நிலையம் ரோட்டில் உள்ள வீட்டில் உள்ளவர்கள் தூங்கிக்கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்தவர் கழுத்தில் இருந்து 5 பவுன் தாலி செயினை மற்றும் அவரது மகள் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி பறித்து சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைரேகை நிபுணர் மூலம் தடயம் சேகரிக்கப்பட்டு பழைய குற்றவாளிகளின் ஒப்பிட்டு சோதனையில் முடிவில் பிரகாஷ் கைரேகையுடன் ஒத்துப் போவதால் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.


மேலும் கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியூர் சென்றிருந்தவர்‌ வீட்டில் சுமார் 400 கிராம் எடைகொண்ட வெள்ளி பொருட்கள், ரூ.25,000 யாரோ மர்ம நபர் திருடி சென்றதாக சின்னசேலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கையை நிபுணர் சேகரித்த தடயம் தர்மராஜ் கைரேகையுடன் ஒத்துப் போவதால் அவரை விசாரணைக்கு அழைத்து வரப்பட்டார்.


இந்த வழக்குகளில் பிரகாஷ் மற்றும் தர்மராஜ் இருவரும் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். மேலும் தங்களுடன் சிலர் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டதாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தர்மராஜின் சகோதரர் சக்திவேல் என்பவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் அடிப்படையில், சின்னசேலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியசிறுவத்தூர், எலவடி, மேலூர், எரவார், எலியத்தூர், தென்செட்டியந்தல், கனியாமூர், அம்மையகரம் உள்ளிட்ட பகுதிகள். கீழ்க்குப்பம் எல்லைக்கு உட்பட்ட பெத்தாசமுத்திரம், அரியலூர் பகுதிகள். கச்சிராயபாளையம் எல்லைக்கு உட்பட்ட தெங்கியாநத்தம், வடக்கந்தல் பகுதிகள்.




கள்ளக்குறிச்சி எல்லைக்கு உட்பட்ட ராமசந்திரா நகரில் இவர்கள் மூவரும் களவாடியதாக கூறி 13 வழக்குகளில் சுமார் 25 சவரன் சின்னசேலம் நகை கடையிலும் மற்றும் 13 சவரன் நகை கள்ளக்குறிச்சி நகைக் கடையிலும் விற்பனை செய்த நகைகள் மொத்தம் 38 சவரன் மீட்கப்பட்டது. இதில் தர்மராஜ் மற்றும் பிரகாஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்‌. சக்திவேல் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட உள்ளார். இந்த வழக்கில் பரமசிவம் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் எந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடவில்லை என தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.


காவல்துறையினர் நடவடிக்கை மீது குற்றச்சாட்டு:-


"ஆயிரம் குற்றங்கள் செய்தாலும் கைது செய்யும் நடவடிக்கை என்பது காவல் துறைக்கு தனி வழி முறை என்பது உள்ளது.  இச்சம்பவத்தில் இரவுநேரங்களில் வீடுகளில் புகுந்து ஆண்களை அடித்து இழுத்துச் செல்வதும் வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தி விடும் காவல்துறைக்கு யார் அதிகாரம் வழங்கியது எனும் கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. பணம் இருக்கும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை வேறு விதமாகவும் சாதாரண ஏழை குடிமக்களை கைது செய்யும் நடவடிக்கை வேறுவிதமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.


குறிப்பாக இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட அன்றே வழக்குப்பதிவு செய்யாமல் மூன்று நாட்களுக்கு மறைத்து வைத்ததற்கான காரணம் என்னவென்று தற்போது கேள்விகள் எழுந்துள்ளன..  கைது செய்யப்பட்டவர்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் குற்றவாளிகள் இல்லை என்று வெளியே அனுப்பப்பட்ட பரமசிவம் தெரிவித்துள்ளார். ஆயிரம் ஜெய் பீம் படங்கள் வந்தாலும் இந்த காவல் துறையின் அராஜக போக்கு அடங்குமா என தெரியாத சூழ்நிலை இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.