இந்திய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என பலரும் தாங்கள் சம்பாதிக்கும் ஒரு பகுதியினை கவர்ச்சியான கார்களை வாங்குவதில் செலவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் M.K. ஸ்டாலினும் நீண்ட காலமாக இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் காரை வாங்கி தனது கார் கலெக்சனில் இந்த புதிய காரையும் இணைத்துள்ளார்.
சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய சாலை மற்றும் பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அப்பொழுது தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு தனது புதிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி கார் மூலம் பார்வையிடச் சென்றார். அதுவும் அந்த கார் ஒன்றல்ல, இரண்டு. அந்த புகைப்படமும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்தநிலையில், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் போர்ட்டலின் படி, தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினால் பயன்படுத்தப்படும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவிகள் கார்கள் இரண்டும், டிஃபென்டர் 110 எஸ்இ வகையை சேர்ந்தது.
இது முறையை ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் 2021 இல் பதிவு செய்யப்பட்டது எனவும், இவை இரண்டும் 3.0 லிட்டர் ஆயில் பர்னர் மூலம் இயக்கப்படும் டீசல் கார் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், 2995 சிசி திறன் கொண்ட இந்த கார்களானது நான்கு-சிலிண்டர் இன்ஜெனியம் டீசல் எஞ்சின் 4000 ஆர்பிஎம்மில் 296 பிஎச்பிக்கு டியூன் செய்யப்பட்டு, 1500-2500 ஆர்பிஎம்மில் 650 என்எம் உள்ளது. இந்த கார் ஒரு தானியங்கி பரிமாற்றத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 SE காரின் அம்சங்கள் : ஆட்டோ லெவலிங் மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள் DRL, ஃபாக் லேம்ப்கள், 20-இன்ச் 5 ஸ்போக் மற்றும் க்ளோஸ் ஸ்பார்க்கிள் சில்வர் அலாய் வீல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இதில் மின்சாரம் சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் நெடுவரிசை, பிரீமியம் கேபின் லைட்டிங் மற்றும் 2-வே மேனுவல் ஹெட்ரெஸ்ட்களுடன் 12-வே எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய தானிய லெதர் முன் இருக்கைகள் உள்ளன. SUV மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் 400 W உடன் 10 ஸ்பீக்கர்கள் மற்றும் ஒரு ஒலிபெருக்கியைப் பெற்றுள்ளது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பெரிய மற்றும் பிரீமியம் எஸ்யூவிகள் மீது அதிக விருப்பம் உள்ளது. புதிய டிஃபென்டரைத் தவிர, அவர் ஒரு ரேஞ்ச் ரோவர் மற்றும் ஒரு லெக்ஸஸ் எல்எக்ஸ் 470 போன்ற வாகனங்களை அவரது கேரேஜில் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் லேண்ட் ரோவர் டிஃபென்டர் 110 SE காரின் விலை ரூ. 2.10 கோடி முதல் 4. 38 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் அளித்த தனது சொந்த அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களில், தன்னிடம் சொந்தமாக கார் கூட இல்லை என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்