அட்லீ இயக்கி ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வெளியாகி இந்தி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. ஷாருக்கான் இந்த படத்தில் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜவான் படத்திற்கு முன்பாக ஷாருக்கான் ரானுவ அதிகாரியாக நடித்த படங்களைப் பார்க்கலாம்.


ஃபெளஜி


 ஃபெளஜி. 1988-ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சித் தொடர் ஃபெளஜி.   இந்தத் தொடரின் மூலமாக ஷாருக்கான்  நடிகராக அறிமுகமானார். டி.டி. நேஷ்னல் சேனலில் ஒளிப்பரப்பான இந்தத் தொடரை ராஜ் குமார் கபூர் இயக்கினார். இன்று பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் திரைப்பயணம் இந்தத் தொடரில்தான் தொடங்கியது. ஃபெளஜி படம், இப்போதும் ஜியோ சினிமாவில் பார்க்க கிடைக்கிறது.


ஆர்மி


இரண்டாவது முறையாக ஷாருக்கான் ராணுவ வீரராக நடித்தது ஆர்மி படத்தில்தான். ஷாருக்கான், ஸ்ரீதேவி இணைந்து நடித்த இந்தப் படம் 1996-ஆம் வருடம் வெளியானது. ஒரு நேர்மையான ரானுவ வீரரான அர்ஜுன் (ஷாருக்கான்) ஒரு கேங்ஸ்டரால் கொல்லப்படுகிறார். தனது கனவனை கொன்றவனை பழிவாங்க அவனது மனைவி ஒரு பெரிய ராணுவப்படையை உருவாக்கி வில்லனை பழிதீர்ப்பதே இந்தப் படத்தின் கதை.  ஜீ ஃபைவ் ஓடிடி தளத்தில் இந்தப் படத்தை பார்க்கலாம்.


ஒன் டூ கா ஃபோர்


ஷாருக்கான் ஜுஹி சாவ்லா மற்றும் ஜாக்கி ஷெராஃப் இணைந்து நடித்தப் படம் ஒன் டூ கா ஃபோர். இந்தப் படத்தில் அர்ஜுன் என்கிற ராணுவ வீரரின் கதாபாத்திரத்தின் நடித்திருப்பார் ஷாருக்கான்.  தனது உயிர்  நண்பன் ஜாவேதின் மரணத்திற்குப் பிறகு அவரது குழந்தைகளை வளர்த்து வருகிறார் அர்ஜுன். ஆனால் ஜாவேதின் மரணம் எதேச்சையானது இல்லை.. அது ஒரு கொலை.. என்று தெரியவரும்போது அதனை விசாரணை செய்கிறார் அர்ஜுன். கடந்த 2001-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸில் பார்க்க கிடைக்கிறது.


மே ஹூ நா


ஷாருக்கான் , சுனீல் ஷெட்டி, சுஷ்மிதா சென் உள்ளிட்டவர்கள் நடித்து கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மே ஹூ நா. ராணுவ அதிகாரியின் மகள் ஒருவரின் உயிரை, பாதுகாக்க கல்லூரி மாணவராக அவருடன் இருக்கிறார் ஷாருக்கான். தமிழில் ஏகன் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது இந்தப் படம். அஜித், நயன்தாரா அதில் நடித்திருந்தார்கள்.


வீர் ஸரா


 நீங்கள் சீதா ராமம் என்கிற ஒரு படத்தைப் பார்த்திருந்தால் வீர் ஸரா படத்தின் கதை மாதிரி இருப்பதாக தோன்றலாம். வீர் என்கிற ஒரு ராணுவ வீரன் ஸரா என்கிற இஸ்லாமியப் பெண்ணை காதலிக்கிறார். வீர் பாகிஸ்தான் சிறையில் அடைபட்டிருப்பது தெரியாமல், அவன் இறந்துவிட்டதாகவும் தெரியாமல்,  இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருக்கிறார் ஸரா.


ஜப் தக் ஹே ஜான்


ஷாருக்கான், அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் நடித்து வெளியான திரைப்படம் ஜப் தக் ஹே ஜான். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்தார். ரசிகர்களிடையே மிகப்பெரிய் வரவேற்பைப் பெற்றது இந்தப் படம்.


பதான்


கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய்  வசூல் சாதனை செய்த படம்  பதான். இந்தி சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களில் முக்கிய இடத்தைப் பிடித்தது பதான் திரைப்படம்.