விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனக் கோரி அனுமதியின்றி பாஜகவினர் ஆர்ப்பாட்ட செய்ய முயன்றனர். அப்போது  ஆர்ப்பாட்டத்திற்கு ஐந்து நிமிடம் கொடுங்கள் என பாஜக மாவட்ட தலைவர் கெஞ்சியதை அடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 


பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை தமிழக அரசு முறையாக பயன்படுத்தவில்லை எனக் கோரி பாஜக சார்பில் ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் பிச்சை எடுத்து திமுக அரசுக்கு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  பாஜக தெற்கு மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமையில் அனுமதியின்றி பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்த முற்பட்டதால் போலீசார் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டாம் என பாஜகவினரிடம் கூறினர். அப்போது தெற்கு பாஜக மாவட்ட தலைவர் போலீசாரிடம் சார் ஐந்து நிமிடம் கொடுங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொள்கிறோம் என கெஞ்சினார். அதனை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுக அரசை கண்டித்தும் காவல் துறையை கண்டித்தும் கண்டன கோஷங்களில் ஈடுபட்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.




புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.