கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். சில இடங்களில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிகிறது. சில நேரங்களில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.


கட்டை விரலை கடித்து வைத்த கணவர்:


உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது பிலிபிட். இங்கு அமைந்துள்ளது சராவ்ரி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் திலக் சந்திரா. இவரது மனைவி ரேகாதேவி. கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்படுவது அடிக்கடி நடந்து வந்துள்ளளது. இந்த நிலையில், சமீப நாட்களாக திலக் சந்திரா கருத்து மனைவியுடனான சண்டையின்போது அவரை தாக்குவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.


இந்த நிலையில், கடந்த 14-ந் தேதியும் கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், திலக் சந்திரா அவரது மனைவி ரேகா தேவியை அடிக்க முயற்சித்துள்ளார். அதை ரேகா தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் மனைவி என்றும் பாராமல் அவரது வலது கையின் கட்டை விரலை கடித்துள்ளார். இதனால், ரேகா வலியில் துடித்துள்ளார்.


தம்பிக்கும் கடி:


திடீரென ரேகாவின் அலறல் குரல் கேட்டதால், வீட்டின் உள்ளே இருந்த திலக் சந்திராவின் தம்பி வீறு சந்திரா ஓடி வந்துள்ளார். அப்போது, அவர் தனது அண்ணன் திலக் சந்திராவை தடுக்க முயன்றுள்ளார். ஆனால், திலக் சந்திரா ஆத்திரத்தில் தனது தம்பியின் கட்டை விரலையும் கடித்துள்ளார். ரேகா தேவி மற்றும் வீறு சந்திரா இருவரும் வலியில் துடித்துள்ளனர்.


இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஜகன்பாத் காவல் நிலையத்தில் ரேகா தேவி தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். காரணமே இல்லாமல் தன்னை அடிப்பதாகவும், தனது கட்டை விரலை கடித்ததாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். ரேகா தேவியின் புகார் அடிப்படையில் திலக் சந்திரா மீது 504 சட்டப்பிரிவு, 325 மற்றும் 323 சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குடும்பத் தகராறில் மனைவியின் கட்டை விரலை கணவனே கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வர மறுத்த மனைவியின் மூக்கை கணவன் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Crime: உச்சகட்ட கோபம்! ஸ்க்ரூடிரைவரால் 41 முறை மனைவியை கொலை செய்த கொடூரம்: கணவன் வெறிச்செயல்!


மேலும் படிக்க: அடித்து நொறுக்கப்பட்ட வாகனங்கள்! போலீஸ் பிடியில் இருந்து தப்பிய ரவுடிகளுக்கு கை, கால் முறிவு - நடந்தது இதுதான்!