Crime: துருக்கி ஹோட்டலில் மனைவியை ஸ்க்ரூடிரைவரால், கணவர் 41 முறை குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக, கொடூரமான கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் இம்மாதிரியான கொடூர சம்பவங்கள் தெரிந்த நெருங்கிய நபர்களாலேயே பெரும்பாலான நேரங்களில் நிகழ்கிறது. இந்நிலையில், தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. துருக்கி ஹோட்டலில் மனைவியை ஸ்க்ரூடிரைவரால், கணவர் 41 முறை குத்திக் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
என்ன நடந்தது?
இங்கிலாந்தில் இருந்து நவம்பர் 11ஆம் தேதி இஸ்தான் புல் நகருக்கு சென்ற ஒரு தம்பதி, நவம்பர் 14ஆம் தேதி ஃபாத்திஹ் மேவ்லனாகாபி என்ற மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தனர். அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. வாக்குவாதம் நீடித்த நிலையில், தனது மனைவியை அருகில் இருந்த ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அலறல் சத்தம் கேட்ட ஹோட்டல் ஊழியர்கள், அறைக்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடந்திருந்தார். இதனை அடுத்து, ஹோட்டல் ஊழியர்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து துருக்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், கடந்த செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணியளவில் நடந்துள்ளது. இதற்கிடையில், மனைவியை கொலை செய்துவிட்டு, ஹோட்டல் அறையில் இருந்து ரத்தக்கறை படிந்த டிசர்ட் அணிந்தபடி, ஹோட்டலில் இருந்து தப்பிக்க முயன்றிருக்கிறார். அப்போது, ஹோட்டல் ஊழியர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், போலீசார் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும், தனது மனைவி எனக்கு போதைப்பொருள் கொடுத்ததாக கூறி இருந்தார். இதனால், அவரிடம் சண்டைபோட்டு ஆத்திரத்தில் கொலை செய்தேன். தனக்கு உளவியல் பிரச்னைகளும் இருப்பதாகவும் கூறினார். ஆனால், ஹோட்டல் அறையில் போலீசார் சோதனை செய்தபோது எந்த ஒரு போதை பொருளுக்கான தடையமும் கிடைக்கவில்லை என்றும் கணவன், மனைவி இருவருக்கு 22 முதல் 25 வயதாகிறது. மனைவியை, 41 முறை கணவன் குத்திக் கொலை செய்திருக்கிறார் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க