மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா திருவெண்காடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இளையமதுகூடம் கிராமம், பட்டவெளி தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரின் மகன் 50 வயதான ராஜகோபால். இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த பூசாரி தெருவை சேர்ந்த குப்புசாமி என்பவரின் மகன் 55 வயதான கலியமூர்த்தி ஆகிய இருவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. 




இந்த நிலையில் இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 2012ஆம் ஆண்டு கலியமூர்த்தி உள்ளிட்ட அவரது நண்பர்கள், ராஜகோபால் என்பவரின் கூரை வீட்டைத் தீ வைத்துக் கொளுத்தினர். இவ்வழக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சீர்காழி சார்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மும்தாஜ், குற்றவாளிகளான 55 வயதான கலியமூர்த்தி, 50 வயதான ஆனந்த், 48 வயதான செந்தில்குமார் உள்ளிட்ட மூவருக்கும் 5 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ‌பாய் ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். இதனைத் தொடர்ந்து கலியமூர்த்தி, ஆனந்த், செந்தில்குமார் உள்ளிட்ட மூவரையும் திருவெண்காடு காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


MS Swaminathan Profile: 38 டாக்டர் பட்டங்கள்: அரிசித் தட்டுப்பாட்டைப் போக்கியவர் - யார் இந்த மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன்?




இதேபோன்று சீர்காழியில் கந்துவட்டி புகாரில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீர்காழி தாடாளன் வடக்கு வீதியில் வசித்து வருபவர் ராஜா. இவர் சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு பகுதியில் வினோத் பைனான்ஸ்  உரிமையாளர் வினோத்குமார் என்பவரிடம்  கடந்த ஆண்டு  ஜீன் 12 -ம் தேதி அன்று 3 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி உள்ளார்.  கடனாக பெற்ற தொகைக்கு ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வட்டி வீதம் ஒராண்டுக்கு 9 லட்சத்திற்கும் மேல் பணம் கொடுத்துள்ளார்.


Indraja Shankar: பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் கல்யாணப் பொண்ணு? ஒரு கை பார்க்க தயாரான இந்திரஜா ஷங்கர்!




வாங்கிய தொகையை விட வட்டி அதிகமாக செலுத்தியும் மீண்டும் வட்டி கேட்டு வினோத்குமார் அசிங்கமாக திட்டியும், அடித்துள்ளதாகவும் தன்னுடைய டாடா ஏசி வாகனம் மற்றும் செல்போனை எடுத்து சென்று விட்டதாகவும் ராஜா சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து புகாரை பெற்ற காவல்துறையினர் உரிய விசாரணை செய்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான வினோத்குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத்குமாரின் மீது  இரண்டு கந்துவட்டி வழக்குகளும் ஒரு வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Honda Activa: லிமிடெட் எடிஷன் ஆக்டிவா ஸ்கூட்டரை அறிமுகம் செய்த ஹோண்டா - சிறப்பு அம்சங்கள் என்ன?