மேலும் அறிய

திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாறி மாறி கத்தியால் குத்தி கொண்ட இருவர்: பகீர் சிசிடிவி காட்சிகள்  

இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர். இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாறி மாறி கத்தியால் இருவர் குத்தி கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர்  அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார். அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார். இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக முயற்சிக்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர். இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாறி மாறி கத்தியால் குத்தி கொண்ட இருவர்: பகீர் சிசிடிவி காட்சிகள்  

இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின்  மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாறி மாறி கத்தியால் குத்தி கொண்ட இருவர்: பகீர் சிசிடிவி காட்சிகள்  

பெண்கள் மட்டுமே சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த மருத்துவமனை வளாகத்தின் முன்பு குடிபோதையில் தினந்தோறும் பல்வேறு நபர்கள் பிரச்சினையில் ஈடுபட்டு வருகின்றனர் ஆகையால் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காவல்துறையினர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் அப்பொழுதுதான் இதை போன்ற பிரச்சினைகள் நடக்காமல் இருப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க முடியும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. தற்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தால் இந்த கத்தி குத்து சம்பவம் நடக்காமல் இருந்திருக்கும் எனவும் இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

நள்ளிரவில் நடைபெற்ற இந்த பிரச்சினையின் போது அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு சில நபர்கள் இருவரையும் தடுத்ததால் உயிரிழப்பு சம்பவம் நடைபெறாமல் இருந்தது என மருத்துவமனையில் இருக்கும் நபர்கள் தெரிவித்துள்ளனர் உடனடியாக காவல்துறையினர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருக்கும் படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகளும் நோயாளிகளுடைய உறவினர்களும் மாவட்ட காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

எங்க அம்மாவையா ஆபாசமா திட்டுற? நள்ளிரவில் ஓனருக்கு நேர்ந்த கொடூரம்! ஸ்ரீபெரும்புதூரில் பகீர்!
எங்க அம்மாவையா ஆபாசமா திட்டுற? நள்ளிரவில் ஓனருக்கு நேர்ந்த கொடூரம்! ஸ்ரீபெரும்புதூரில் பகீர்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!
நொடிப் பொழுதில் மாறிய கல்யாண வீடு: திருமண ஊர்வலத்தில் புகுந்த சொகுசு கார்; 13 பேர் ரத்த வெள்ளத்தில் அலறல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
நாளை 10ஆம் வகுப்பு மறுகூட்டல், மறு மதிப்பீடு முடிவுகள்; காண்பது எப்படி?  அசல் மார்க்‌ஷீட் எப்போ?
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
CM விஜய்கிட்ட ஒன்னுமே இல்லை..பாஜக தான் முழு பொறுப்பு, எடப்பாடி தவறவிட்டார்- கிருஷ்ணசாமி ஆவேசம்
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
தொடர் தோல்வியில் இந்தியா! வெற்றிப்பாதைக்கு திரும்புவது எப்போது? கம்பீருக்கு முற்றும் நெருக்கடி
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
659 கி.மீட்டர் மைலேஜ்.. 52 ஆயிரம் ஆஃபர்! 4 லட்சம் ரூபாய்க்கும் கம்மி விலையில் Maruti Alto K10
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
கஞ்சா போதையில் வெறிச் செயல் ; தனியாக இருந்த 60 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்
Passport Ranking: மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
மீண்டும் மீண்டுமா? முதல் 100 இடங்களில் கூட இந்தியா இல்லை? டாப் 10 பாஸ்போர்ட் ரேங்கிங்
Embed widget