தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மறவபட்டி, மணியாரம்பட்டி ஆகிய இரண்டு கிராமங்களும் அருகருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் மறவபட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மணியாரம் பட்டியில் உள்ள ஒரு கடைக்கு சென்று சில பொருட்கள் வாங்கி வந்துகொண்டிருந்தனர்.
தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் தீவிரம்
அப்போது அங்கிருந்த மணியாரம் பட்டியை சேர்ந்த இளைஞர்களுடன் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய் தகராறு முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது. அதன்பின் ஒருவரை ஒருவர் தாக்க தொடங்கினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இரண்டு கிராம இளைஞர்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த மோதலில் மறவபட்டியை சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும், மணியாரம் பட்டியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
Supreme Court On Family : திருமணமாகாமல் ஒன்றாக இருப்பதும் குடும்பம்தான்.. உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து என்ன தெரியுமா?
மேலும் கோஷ்டி மோதல் குறித்து இரண்டு தரப்பு மக்களும் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்த பிரச்சனை இளைஞர்களோடு முடியாமல் அந்தப் பகுதியில் இரண்டு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அதனால் இரண்டு கிராமங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்