தகாத உறவு:


தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த லேட் சுருளி வேல் என்பவரின் மகன் சதீஷ் (24). இவர், கம்பத்தில் உள்ள பலசரக்கடை ஒன்றில் சில மாதங்களுக்கு முன்பாக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் வேலைக்குச் செல்லாமல் சுற்றி திரிந்துள்ளார். இந்நிலையில் சதீஷுக்கும் கம்பம் மஞ்சகுளம் சாலையில் உள்ள காம்பவுண்ட் வீட்டில் குடியிருந்து வரும் கணவனை இழந்த நந்தினி(31) என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.


TVK Vijay: ஈஸ்டர் தினத்தில் ஒற்றுமை, சகோதரத்துவம் தழைக்கட்டும் - தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து




கொலை சம்பவம்:


நந்தினி வீட்டிற்கு அடிக்கடி சதீஷ்குமார் வந்து போய் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக நந்தினி வீட்டிற்கு புதிதாக கம்பம் உலக தேவர் தெருவை சார்ந்த பிரபாகரன்(27) என்பவர் வந்து சென்றுள்ளார். இதன் காரணமாக நந்தினி, சதீஷ், பிரபாகரன் ஆகியோருக்கு பிரச்சனை நிலவி வந்துள்ளதாக தெரிகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சதீஷ் நந்தினி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பிரபாகரனும், நந்தினியும் இருந்துள்ளனர். இதனால் சதீஷுக்கும், பிரபாகரனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டதாகவும், அப்போது அங்கு இருந்த கத்தி ஒன்றை எடுத்து பிரபாகரன் சரமாரியாக சதீஷை தாக்கியுள்ளார்.


CM Stalin: "எல்லா ரவுடிகளையும் கட்சியில் வைத்துக்கொண்டு சட்ட ஒழுங்கை பேசலாமா?" - முதல்வர் ஸ்டாலின்




ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்குதல்:


சதீஷும் கண்ணாடி துண்டுகளை எடுத்து பிரபாகரனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருவரும் ரத்த காயங்களுடன் இருக்க அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காயங்களுடன் இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


Rakshita: பிறந்தநாள் கொண்டாடும் விஜய்யின் 'மதுர' பட நாயகி.. இப்போ என்ன பண்றாங்க தெரியுமா?




கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை:


முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சதீஷ் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் நேற்று அதிகாலை வேளையில் உயிரிழந்தார். இதனை அடுத்து இச்சம்பவம் குறித்து கம்பம் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நந்தினி மற்றும்   பிரபாகரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முறையற்ற உறவின் காரணமாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.