தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயா நகர் ஜெயராம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 63). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ராமகிருஷ்ணன் (62). அவர், வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். சீனிவாசன் கடந்த 16-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு ராஜபாளையத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுள்ளார்.  இதேபோல், ராமகிருஷ்ணனும் தனது மனைவியுடன் கடந்த 19-ந்தேதி தனது சொந்த ஊரான எஸ்.அழகாபுரிக்கு சென்றுள்ளார். இவர்கள் வெளியூர் சென்றதால் வீடுகள் பூட்டிக் கிடந்தன.


Chembarambakkam Lake : சென்னை மக்களே ஹேப்பி நியூஸ்.. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளில் அதிகரிக்கும் நீர்வரத்து..




இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த சீனிவாசன் கடந்த 21-ந்தேதி நள்ளிரவிலும், ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாலையிலும் வீடு திரும்பினர். அப்போது அவர்களது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதில் சீனிவாசன் வீட்டில் 31 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும், ராமகிருஷ்ணன் வீட்டில் 6¼ பவுன் நகைகள், 350 கிராம் வெள்ளி பொருட்களும் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.


CM Stalin On NTA Exam: இந்தி தேர்வு இதுக்கெல்லாம் கட்டாயமா? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்




பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து வீடுகளில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் தனித் தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் தனித்தனி வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Chandrayaan Moon Southpole : நிலவின் தென்துருவத்தை உலக நாடுகள் குறிவைப்பது ஏன்? சந்திரயான் 3 மூலம் இந்தியா சாதிக்க உள்ளது என்ன!?