சிறுமி உயிரிழப்பு


மதுரை மாநகர் கூடல்நகர் காவல்நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மாலை 5 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவி பள்ளி விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை மாணவி வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறி வீட்டில் உள்ள குடும்பத்தினர், சிறுமியை வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

 

இதையடுத்து முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு அனுமதித்தபோது  சிறுமி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை உடற்கூராய்விற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் மதுரை கூடல்புதூர் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

 


 

கைரேகை நிபுணர்கள் தடயம் சேகரிப்பு

 

சிறுமி குளிக்கசென்றபோது குளியலறையில் மயங்கி விழுந்து இறந்ததாக குடும்பத்தினர் கூறிய நிலையில் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியோடு தடயங்களை சேகரித்துபோது சிறுமியின் ஆடைகள்  கீழே கிடந்த நிலையில் கிடந்துள்ளதை பார்த்த காவல்துறையினர் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழ தொடங்கியது. இதையடுத்து, சிறுமியின் உடற்கூராய்வின் முழுமையான முடிவுக்காக காவல்துறையினர் காத்திருக்கின்றனர். இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். மதுரையில் 11 வயது சிறுமி மரணம் இயற்கையானதா? சிறுமி கொலை செய்யப்பட்டாரா? பாலியல் வன்கொடுமையா ? என்ற அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.