PBKS vs DC: ஐபிஎல் 2024ன் இரண்டாவது போட்டியும், இன்றைய முதல் போட்டியிலும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு மோத இருக்கின்றன. 

கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் நடைபெற்றது. அதில், பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு வெற்றிபெற்றது. ஆனால், இந்த முறை சூழ்நிலைகள் முற்றிலும் மாறி போயுள்ளது. கடந்த ஆண்டு விபத்து காரணமாக விளையாடாமல் போன ரிஷப் பண்ட், மீண்டும் களத்திற்கு வந்துள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும் எப்படியாவது வெற்றியை பெற வேண்டும் என்று முயற்சிப்பார். இந்தநிலையில், இந்த போட்டியில் எந்தெந்த வீரர்களுடன் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் களமிறங்கும் என்பதை இங்கே பார்க்கலாம். 

பிட்ச் ரிப்போர்ட்: 

மொஹாலியில் உள்ள மகாராஜா யாதவிந்தர் சிங் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது இதுவே முதல்முறை. இந்த போட்டி பிற்பகல் நடைபெறுவதால், வெப்பத்தின் காரணமாக எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்கோரே பதிவாகலாம். இதன் காரணமாக, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம். முதல் அணி பேட்டிங் செய்யும்போது அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பவுண்டரிகள் அடிக்க கடினமாக இருக்கும். சுழலும் பந்துவீசும் அணிக்கு சிறப்பாக அமையலாம்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்: 

இதுவரை ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 32 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 16 வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த சீசனிலும் இரு அணிகள் தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன. 

புள்ளிவிவரங்கள் டெல்லி கேப்பிடல்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
முதல் பேட்டிங் வெற்றி 5 6
சேஸிங் வெற்றி 11 10
அதிகபட்ச ஸ்கோர் 231 202
குறைந்தபட்ச ஸ்கோர் 58 68
அதிக ரன்கள் மயங்க் அகர்வால் (450 ரன்கள்) டேவிட் மில்லர் (322 ரன்கள்)
அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் பிரப்சிம்ரன் சிங் (103) ஷிகர் தவான் (106*)
அதிக விக்கெட்டுகள் ககிசோ ரபாடா (13) அக்சர் படேல் (20)
சிறந்த பந்துவீச்சு அமித் மிஸ்ரா (4/11) சாம் கர்ரன் (4/11)

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு என்பது ஆடுகளத்தை பொறுத்தது. எனவே, இரு அணிகளும் பந்துவீச்சை சிறப்பாக கையாள வேண்டும். டெல்லி அணியை பொறுத்தவரை, ககிசோ ரபாடா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், இஷாந்த் சர்மா, ஆந்த்ரே நோர்கியா, அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருப்பதால், டெல்லியின் பந்துவீச்சு தாக்குதல் சிறப்பாக உள்ளது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் டெல்லி வெற்றி பெற முடியும் என்பதை இது காட்டுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

பஞ்சாப் கிங்ஸ்: 

ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், ஜானி பேர்ஸ்டோவ், சிக்கந்தர் ராசா/லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஹர்சல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார்

டெல்லி கேப்பிடல்ஸ்: 

பிருத்வி ஷா, டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ரிஷப் பண்ட் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், லலித் யாதவ், ஜே ரிச்சர்தாசன், குல்தீப் யாதவ், கலீல் அகமது, முகேஷ் குமார், அன்ரிச் நார்ட்ஜே