Princess Kate:இங்கிலாந்து இளவரசிக்கு புற்றுநோய்! கேத் மிடில்டன் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

புற்றுநோய் பாதிப்பு காரணமாக இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

இளவரசி கேத் மிடில்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதற்கு கீமோதெரபி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவ குழுவினர் அறிவுறுத்தினர். அதன்படி தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இந்த நோய் பாதிப்பு குறித்த தகவலை வெளியிடாமல் இருந்தோம். புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்த போது எனக்கும் வில்லியம்ஸூக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும் ஜனவரி மாதம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பின் உடல் நலம் மீண்டு வர நீண்ட காலம் ஆனது. அதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை பெற முடியவில்லை. தற்போது சிகிச்சை தொடங்கியுள்ள நிலையில் எங்கள் குழந்தைகளிடம் இப்பிரச்சினையை புரியும் வகையில் எடுத்து சொல்லியுள்ளோம். நான் தற்போது நலமாக இருக்கிறேன். நோய் பாதிப்பில் இருந்து மீண்டு வர கவனம் செலுத்தி வருகிறேன். ஒவ்வொரு நாளும் உடலளவிலும், மனதளவிலும் வலுப்பெற்று வருகிறேன்” என கேத் மிடில்டன் கூறியுள்ளார். இந்த தகவல் இங்கிலாந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

காணாமல் போன இளவரசி 

இளவரசி கேத் மிடில்டன், கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் வயிற்றில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் கேத் உடல்நிலை குறித்து பல தகவல்கள் பரவ தொடங்கியது. மேலும், அன்னையர் தினம் அன்று கேத் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை எடிட் செய்து வெளியிட்டது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இந்த புகைப்படத்துக்கு அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் கடந்த வாரம் லண்டனில் நடந்த செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காதது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. சிலர் சமூக வலைதளங்களில் இளவரசி இறந்து விட்டதாக தகவல் பரப்ப பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க: Deepfake: மீண்டும் வெடித்த டீப் பேக் சர்ச்சை.. பரப்பப்படும் போலி வீடியோ.. ஷாக்கான இத்தாலி பிரதமர்!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola