மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உமையாள்பதி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் இவருக்கும், கீழவாடி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான தமிழ்மணி என்பவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக நடராஜன் மற்றும் மகன்களை பிரிந்து கடந்த சில ஆண்டுகளாக கீழவாடியில் உள்ள தனது தந்தை வீட்டில் தங்கி தமிழ்மணி அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் கல் அறுக்கும் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள பாலுரான் படுகை கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான செந்தில் என்பவர் செங்கல் சூலைக்கு வந்து செல்லும்போது பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து தமிழ்மணி, செந்தில் உடன் கடந்த சில மாதங்களாக செந்தில் வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் தமிழ்மணியின் நடத்தையில் செந்தில் சந்தேகப்பட்டு மதுகுடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவார் எனவும், வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என வீட்டை பூட்டி அடைத்து வைத்துள்ளார்.
இதேபோல் நேற்று இரவு செந்திலுக்கும் தமிழ்மணிக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில் தமிழ்மணியை தாக்கியுள்ளார். இதில் தமிழ்மணி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அதனைத் தொடர்ந்து கொலையை மறைக்கும் விதமாக தமிழ் தமிழ்மணியின் சடலத்தை வீட்டில் உள்ள பிரிட்ஜ் பக்கவாட்டில் மறைத்து வைத்துள்ளார். மேலும் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் செந்தில் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. ஆனால் டிவியை சத்தமாக வைத்துக்கொண்டு செந்தில் வீட்டில் அமர்ந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கொள்ளிடம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
Actor Vadivelu: கிட்னி செயலிழப்பால் அவதிப்படும் போண்டாமணி...நடிகர் வடிவேலு எடுத்த முக்கிய முடிவு
தகவலை அடுத்து அங்கு விரைந்த கொள்ளிடம் காவல் ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் மணிகண்ட கணேஷ் செந்தில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களை கண்டதும் செந்தில் பின்பக்கமாக குதித்து அருகில் உள்ள மூங்கில் தோப்பில் புகுந்து தப்பியுள்ளார். பின்னர் காவல்துறையினர் வீட்டை சோதனை செய்த போது வீட்டில் பிரிட்ஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், தமிழ்மணியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பொதுமக்கள் உதவியுடன் தப்பி ஓடிய செந்திலை காவல்துறையினர் பிடித்து கொள்ளிடம் காவல் நிலையம் ழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.