சென்னையில் அமைந்துள்ள முக்கிய பகுதிகளில் சேத்துப்பட்டும் ஒன்று. இந்த பகுதியில் உள்ள 16வது அவென்யூவில் பாரத ஸ்டேட் வங்கியான எஸ்.பி.ஐ.-யின் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அதிகாலை இந்த ஏ.டி.எம். மையத்தின் கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள தெலுங்கான மாநிலம் ஹைதராபாத்தில் அலாரம் அடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.




தகவலறிந்த சென்னை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் மர்மநபர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். காவல்துறையினரை கண்ட அவர் உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, உடனடியாக ஏ.டி.எம். மையம் மற்றும் அதன் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.


போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையடிக்க முயன்ற நபர் துப்புரவு வாகனத்தில் தப்பிச்சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த துப்பரவு வாகனத்தை ஓட்டுபவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.




போலீசார் விசாரணையில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த நபர் ரஞ்சித் என்றும், அவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த துப்பரவு பணியாளராக பணியாற்றி வருவதையும் போலீசார் கண்டுபிடித்தனர். சென்னை, அன்னை சத்யாநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு (வயது 35) கடன் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏ.டி.எம். இயந்திரத்தை கொள்ளையடித்து ரூபாய் 5 லட்சம் கடனை அடைக்க திட்டமிட்டதாகவும், கொள்ளையடிக்க முயற்சித்தபோது போலீசார் வந்துவிட்டதால் துப்புரவு வாகனத்திலே தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.


கடன் தொல்லையான் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,சென்னையின் பரபரப்பான பகுதியில் அதிகாலையில் இதுபோன்ற கொள்ளை முயற்சி அரங்கேறியிருப்பது பலருக்கும் அதிதர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : ஏடிஎம் மையத்தில் மூதாட்டியை ஏமாற்றி நூதன முறையில் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை


மேலும் படிக்க : Crime | 800 இமெயில்கள்.. மாணவியின் நிர்வாண படங்கள்.. காதலியால் சிக்கிய கணித ஆசிரியர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண