தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கிறது.
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது யார் என்பதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ந் தேதி நடக்கிறது
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வேட்புமனுத் தாக்கல் வரும் ஜனவரி 28-ந் தேதி முதல் தொடக்கம்
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4-ந் தேதி
  • வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 5-ந் தேதி நடக்கிறது : வேட்புமனுக்களைத் திரும்ப பெற பிப்ரவரி 7-ந் தேதி கடைசி நாள்
  • மேயர், துணைமேயர் பதவிகளுக்கு மார்ச் 4-ந் தேதி மறைமுகத் தேர்தல்
  • தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

இந்தியா :

  • நாட்டின் 73வது குடியரசு தின விழா கோலாகல கொண்டாட்டம் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொடியேற்றினார்
  • டெல்லி குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு
  • குடியரசு தின விழாவை முன்னிட்டு ராஜபாதையில் முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு
  • பாசறை திரும்புவதற்காக டெல்லியில் முப்படைகளின் பிரம்மாண்ட கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை
  • முன்னாள் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதில் காங்கிரஸ் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள்
  • ரயில்வே தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக ரயிலுக்கு தீ வைப்பு : தேர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு

உலகம் :

  • உக்ரைன் – ரஷ்ய மோதல் விவகாரம் : ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் ஜோ பைடன் அவசர ஆலோசனை
  • தன்பாலின ஈர்ப்பாளர்களை பெற்றோர்கள் ஆதரிக்க வேண்டும் – போப் ஆண்டவர் போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்

விளையாட்டு :

  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : அரையிறுதிக்கு முன்னேறினார் மெத்வதேவ்
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆடும் இந்திய அணி அறிவிப்பு : மீண்டும் கேப்டனான ரோகித் சர்மா
  • மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் துணைகேப்டனாக நியமனம்
  • காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது : தென்னாப்பிரிக்க தொடரில் ஆடிய பும்ரா, முகமது ஷமிக்கும் ஓய்வு 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண