மாணவியுடன் தவறான உறவில் இருந்த கணித ஆசிரியரை அவரது காதலி போலீசில் சிக்க வைத்துள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது
ஸ்காட்லாந்தின் கிழக்கு லொதியன் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றியவர் ரோஸ். 31 வயதான ரோஸ் 2019ம் ஆண்டில் அப்பள்ளியில் பணியாற்றியபோது அவரிடம் படித்த 18 வயது பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளார். ஆனால் கணித ஆசிரியரான ரோஸ் கிம் என்ற பெண்ணுடனும் காதலில் இருந்துள்ளார். ரோஸின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட கிம், அவருடைய இமெயில் ஐடியை செக் செய்துள்ளார்.
அதில் ரோஸுக்கும், அந்த மாணவிக்கும் இடையே 800க்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதில் அந்த மாணவியின் நிர்வாண புகைப்படங்களும் இருந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து பேசிய காதலி கிம், ஒருநாள் இரவு 2 மணிக்கு நானும் ரோஸும் குடித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவனது போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அது அந்தப்பெண் அனுப்பியது. அதுபோல சந்திப்பது தொடர்பான சில மின்னஞ்சல்களும் வந்திருந்தன. இது குறித்து நான் கேட்டபோது போலீசாரிடமோ, பள்ளி நிர்வாகத்திடமோ கூற வேண்டாமென அவன் கூறினான் என்றார்.
காதலி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தற்போதும் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னமும் கணித ஆசிரியர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்துக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்கும் என்ன தொடர்பு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விரைவில் முடிவு எடுக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அந்த ஆசிரியரை மீண்டும் பள்ளியில் எக்காரணத்தைக் கொண்டும் சேர்க்கப்போவதில்லை பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்