மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் சந்தன மாரியம்மன் கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலில் திருவிழா கடந்த ஒரு வாரமாக வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் கோயில் திருவிழாவிற்காக கோயிலை சுற்றி பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோயில் திருவிழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பாக பட்டாசு வெடிக்க பட்டதாக கூறப்படுகிறது.






 

அதில் இருந்து வந்த தீயானது பந்தலில் பட்டு மறைய தொடங்கியது அதுமட்டுமில்லாமல் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களின் வாகனங்களும் முழுமையாக எரிந்து நாசமானது. இதுமட்டுமல்லாமல் கோயிலை சுற்றி இருந்த பழைய இரும்பு பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய இரண்டிற்கு மேற்பட்ட கடைகள் முழுமையாக எரிந்து நாசமானது.




 








 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியார் பேருந்து நிலைய தீயணைப்பு துறையினர் விரைந்து அந்த அணைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட தீயினால் இந்த விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.