இந்திய கால்பந்து அணி ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் இந்திய, ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங், கம்போடியா உள்ளிட்ட அணிகள் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ளன. நேற்று நடைபெற்ற குரூப் போட்டியில் இந்திய அணி கம்போடியா அணியை எதிர்த்து விளையாடியது. 


 


இந்தப் போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 14வது நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோலை அடித்தார். அதன்பின்னர் 49 நிமிடத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒரு கோலை அடித்தார். இதனால் இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்று இருந்தது. ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் சுனில் சேத்ரிக்கு கோல் அடிக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவர் அதை கோலாக மாற்ற தவறினார். 


 






இறுதியில் கம்போடியா நாடு கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்திய அணி அடுத்து ஹாங்காங் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த குரூப் பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணி மட்டுமே ஆசிய கோப்பை கால்பந்துக்கு தகுதி பெறும் என்பதால் இந்திய அணியின் வீரர்கள் தீவிரமாக உள்ளனர். 


82 சர்வதேச கோல்கள் அடித்த சுனில் சேத்ரி:


நேற்றைய போட்டியில் 2 கோல்கள் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் சுனில் சேத்ரி 6வது இடத்தை தன்வசமாக்கியுள்ளார். இவர் தற்போது வரை 82 சர்வதேச கோல்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் கிறிஸ்டியானா ரொனால்டோ 117 கோல்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.  மேலும் சுனில் சேத்ரி இன்னும் 4 கோல்கள் அடிக்கும் பட்சத்தில் மெஸ்ஸியின் 86 சர்வதேச கோல்கள் என்ற சாதனையை சமன் செய்ய உள்ளார். இந்த ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் அவர் அதை செய்வார் என்று கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


 


2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை கால்பந்துக்கு இந்திய அணி தகுதி பெற்று இருந்தது. அதேபோல் 2022 ஆசிய கோப்பை தொடருக்கும் தகுதி பெற வேண்டும் என்று முனைப்பில் இந்திய அணி உள்ளது. ஆசிய கால்பந்து வரலாற்றில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 முறை தகுதி பெற்றதே இல்லை. இந்த வரலாற்றை மாற்றி எழுத சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண