‛அ.தி.மு.க., எழுச்சியாக இருக்கிறது. கட்சி எழுச்சியாக இருக்கிறது என்றால், மக்கள் எங்கள் பக்கம் என்று அர்த்தம். மக்கள் இன்று வருத்தப்படுகிறார்கள்; திமுகவிற்கு ஓட்டளித்ததற்காக வருத்தப்படுகிறார்கள். மக்கள் இந்த ஆட்சியில் மகிழ்ச்சியாக இல்லை. குறிப்பிட்ட சில அமைச்சர்கள் தான் மகிழ்ச்சியாக உள்ளனர். என்றைக்குமே நாங்கள் தான் எதிர்கட்சி. அதிமுகவிற்கு ஆயிரக்கணக்கான கிளைகள் உள்ளது. சாதாரண கட்சி அல்ல. பாஜக, எங்கேயோ ஒரு இடத்தில் கூட்டம் போட்டு, அங்கு 5 ஆயிரம் பேரை, 10 ஆயிரம் பேரை திரட்டுவதில் பயனில்லை. எங்களுக்கு எல்லா இடத்திற்கும் கூட்டம். இது காக்க கூட்டம் இல்லை... கொள்கை கூட்டம். காக்கா கூட்டங்கள், இரைகள் போட்டா கூடும். இரை முடிந்ததும் பறந்துவிடும். நாகூர் போங்க, காலையில் புறாக்கள் இருக்கும். மாலையில் அவை வேளாங்கன்னியில் இருக்கும். அது மாதிரி இடம் மாறும் புறாக்கள் இருக்கு. இது மாதிரி கூட்டத்தை வைத்து கட்சி பலத்தை மதிப்பிடக் கூடாது". என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை தொலைபேசியில் மிரட்டிய மர்மநபரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை குறித்து பேசிய செல்லூர் ராஜூ - தொலைபேசியில் மிரட்டிய பாஜக நிர்வாகி! வைரலாகும் ஆடியோ!
அருண் சின்னதுரை
Updated at:
07 Jun 2022 09:00 AM (IST)
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடன் அந்த நபர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில தற்போது வைரலாக பரவி வருகிறது.
செல்லூர் ராஜூவை மிரட்டும் நபர்
NEXT
PREV
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக, அண்ணாமலை குறித்து கடுமையாக தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் அவருக்கு தொலைபேசியில் பேசும் சுரேஷ் என்ற நபர் சமீபத்தில் நீங்கள் அளித்த பேட்டி நன்றாக இருந்தது. குறிப்பாக அவர்கள் துரும்பை வீசினால் நாங்கள் தூணை வீசுவோம் என்றீர்கள்.தொடர்ந்து செல்லூர் ராஜூவிடம் நீங்கள் மீனாட்சியம்மன் கோவிலில் திருநீர் விட்டீர்களா என்று கேள்வி எழுப்பிகிறார் அதற்கு, இல்லை நான் மீனாட்சி அம்மன் கோவிலில் பிரசாதக் கடைதான் நடத்தினேன் என்று கூறுகிறார்.
அண்ணாமலை ஐபிஎஸ், நீங்கள் மூன்றாம் வகுப்பு படித்தவர் நீங்கள் என்னென்ன சாதனை செய்தீர்கள் என எங்களுக்கு தெரியும், தெர்மாகோலை வைத்து என்ன செய்தீர்கள் என எனக்கு தெரியும். நீங்கள் அவ்வளவு பெரிய அறிவியல் அறிஞர் என மிரட்டல் தொனியில் பேசுகிறார். அதனை தொடர்ந்து போன் கட் செய்யப்பட்டது. இது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் தரப்பில் கேட்டபோது அழைப்பு வந்தது உண்மை என்று கூறியுள்ளனர். போலீஸ் விசாரணையில் மிரட்டல் விடுத்த நபர் பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் என்பது தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடன் அந்த நபர் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‛பாஜக காக்கா கூட்டம்... பதவிக்கு ஓடும் அண்ணாமலை...தனித்து நிற்க அதிமுக தயார்’ -செல்லூர் ராஜூ தாக்கு!
Published at:
07 Jun 2022 08:36 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -