மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த புதுப்பட்டினம் கிராம், திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (வயது 65). கணவர் இல்லாத நிலையில் இந்திராணி தனது 35 வயதான மகன் பிரபாகரனுடன் தனக்கு சொந்தமான இடத்தில் கூரை வீடு கட்டி வாழ்ந்து வந்தார். இந்நிலையில், மகன் பிரபாகரன்  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். 




இந்த சூழலில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இரண்டு நாட்களாக காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த அறையில் ஒரு குழி தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்,  வீட்டில் சந்தேகமான இடத்தில் மண்ணைத் தோண்டி பார்த்தபோது அதற்குள் இறந்த நிலையில் இந்திராணி சடலமாக கிடந்தது தெரியவந்தது. 




Sasikala: போட்டா போட்டி போட்டுக்கொள்ளும் ஓபிஎஸ் - இபிஎஸ்! புரட்சிப்பயணத்திற்கு தயாரான சசிகலா! ப்ளான் இதுதான்!


உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இறந்த நிலையில், என்ன செய்வது என்று தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பிரபாகரன் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி தாயின் உடலை புதைத்தது விட்டு, தானும் அருகிலேயே அமர்ந்து இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து இந்திராணி உடலை தோண்டி எடுத்த புதுப்பட்டினம் காவல்துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




பிளவுக்குப் பின் ஒருங்கிணைந்த அதிமுக, ஆட்சியை பிடித்த நாள் இன்று’ எம்.ஜி.ஆர்., தொடங்கி... ஜெயலலிதா மீட்ட கட்சி இன்று?


மேலும் இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “பிரபாகரனை அரசு செலவில் மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பிரபாகரனுக்கு யாரும் இல்லாத நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்காமல்கண்டு கொள்ளாமல் விட்டால், அவர் மேலும் மனநிலை பாதிக்கப்பட்டு, மூர்க்கத்தனம் அதிகரித்து கிராம பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் என பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபராக மாறிவிடுவார். எனவே, இதனை கருத்தில்கொண்டு அரசு சார்பில் அவரை மனநல காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண