கோடை வந்துவிட்டால் ஏசி பயன்பாடு அதிகமாகிவிடும். ஏசி வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகமாகிவிட்டது.


நடுத்தர வர்க்கத்தினருக்கும் சாத்தியமாகிவிட்டது ஏசி. மக்களின் வாழ்க்கைத்தர உயர்ந்ததன் வெளிப்பாடு அது. கோடை வெயில் அசவுகரியத்திலிருந்து தப்பிக்க மக்கள் இவ்வாறாக ஏசி பயன்பாட்டுக்குள் வந்துள்ளனர். ஆனால், ஏசி எவ்வளவு சவுகரியமானதோ அதே அளவுக்கு அதில் அசவுகரியங்களும் உள்ளன.


ஏசியில் அதிக நேரம் இருப்பதும் கெடுதல். அதனால் ஏற்படும் கேடுகள் பற்றி இப்போது பார்க்கலாம். Web MD, என்ற நிறுவனம் ஏசி பயன்பாடு குறித்து ஆய்வு செய்துள்ளது. அதன்படி தலைவலி, கவனச்சிதறல், வறட்டு இருமல், உடல்சோர்வு, வாசனைப் பொருட்களுக்கு ஒருவித ஒவ்வாமை, தலைசுற்றல், குமட்டல் ஆகியன ஏற்படும்.
அதனால் வெக்கையாக இல்லாவிட்டால் ஏசியை அனைத்துவிடவும். இதனால் அதிக நேரம் ஏசியில் இருக்க வேண்டியது இருக்காது.


ஏசியின் தீமைகள்:


ஏசி நம் உடலில் உள்புறம், தோலின் மேல்புறம் உள்ள ஈரத்தன்மையை உரிந்துவிடும். இதனால் உடல் நீர்ச்சத்தை இழந்துவிடும்.அலர்ஜி மற்றும் ஆஸ்துமா அதிகரிக்கும். அதிகமான குளிரின் காரணமாக இருமல், சளி ஏற்படும்.
கண் மற்றும் தோலில் எரிச்சல் ஏற்படும். வைரஸ் மற்றும் பாக்ட்ரீயா தொற்றுக்கள் ஏற்படும்.


ஏசி பயன்பாட்டில் இன்னொரு சிக்கல் மின் கட்டணம். அதை சமாளிக்கவும் சில டிப்ஸ் உள்ளன.


1. சரியான வெப்பநிலையைத் தேர்வு செய்யுங்கள்:


சிலர் ஏசி வெப்பநிலையை 16 டிகிரிக்கு வைக்கின்றனர். அதுதான் நல்ல கூலிங் தரும் என நம்புகின்றனர். ஆனால் அது உண்மையல்ல.
ஏசியை எப்போதுமே மிகக்குறைந்த வெப்பநிலைக்கு செட் செய்யாதீர்கள். பிஇஇ (Bureau of Energy Efficiency (BEE) என்ற அமைப்பின்படி ஏசியை எப்போதும் 24ல் வைப்பதுதான் சிறந்தது எனக் கூறப்படுகிறது. அதனால் ஏசி குறைந்த அழுத்ததை மட்டுமே ஏற்றுக் கொள்ளுமாம்.


2. பவர் பட்டனை அனைத்துவிடுங்கள்:


ஏசி பயன்பாட்டில் இல்லாவிட்டால் பவர் பட்டனை அனைத்துவிடுங்கள். இது ஏசிக்கு மட்டுமல்ல எல்லா மின் சாதனங்களுக்குமே பொருந்தும். சிலர் ஏசியை ரிமோட்டில் மட்டுமே அனைத்து வைப்பர். இதனால் கம்ப்ரஸர் ஐடல் லோட் மின்சாரப் பயன்பாட்டில் இருக்கும். இது நிச்சயமாக மின் கட்டணத்தை அதிகரிக்கும்.


3. டைமர் யூஸ் பண்ணுங்க:


ஏசி அதிகப்படியாக பயன்பாடு இல்லாமல் இருக்க டைமரைப் பயன்படுத்துங்கள். பகல் முழுவதும், இரவு முழுவதும் என ஏசி ஓடுவதற்குப் பதில் 2ல் இருந்து 3மணி நேரம் ஓடும்படி டைமர் செட் செய்யலாம். இதனால் ஏசியை அதிகப் பயன்பாட்டுக்கு உட்படுத்துவது குறையும். இதனால் உங்களின் மின் கட்டணமும் கணிசமாகக் குறையும்.


4. ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்யுங்கள்: 


ஏசியை அவ்வப்போது சர்வீஸ் செய்யுங்கள். மாதக்கணக்கில் பயன்படுத்தாமல் போட்டு வைக்காதீர்கள். அதனால் அதில் தூசி அடையலாம். தூசி மெஷினை கோளாறாக்கலாம்.


5. கதவு, ஜன்னலை சரியாக மூடுங்கள்:


உங்கள் வீட்டில் ஏசி உள்ள அறையின் கதவு, ஜன்னலை சரியாக மூடி வையுங்கள். எப்போது ஏசி அறையில் ஜன்னல், கதவிற்கு கனமான ஸ்க்ரீன் போடுங்கள். இதனால் அறை வேகமாகக் குளிர்ந்துவிடும். உங்கள் மின் கட்டணமும் குறையும்.


மின் சாதனங்களை சமஜோஜிதமாகப் பயன்படுத்தினால் மின் கட்டணத்தையும் நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.