தமிழ்நாட்டில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதியை அமைச்சர் முதல்வருடன் ஆலோசித்து அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் கடந்த 12 -ம் தேதி திறக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மழலையர் பள்ளி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 14 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். மேலும் அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர்கள் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கும் பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவின் படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நாகராஜன் அறிவுறுத்தலின்படி, சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தென்பாதி ஆகிய பகுதிகளில் இன்று திடீர் வாகன தணிக்கை செய்தார்.
iporjoy cyclone: 'ஆஸ்கர் லெவல் ரிப்போர்ட்டிங்..' ஆழத்தின் தீவிரத்தை காட்ட கடலில் குதித்த நிருபர்..!
அப்போது பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற ஆட்டோக்களை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய ஆவணங்கள், தகுதி சான்றிதழ் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து 5 ஆட்டோக்களை பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். தொடர்ந்து இவ்வாறு வாகனத்தை தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படும் பள்ளி மாணவர் ஏற்றி செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்