ஜூன் மாதத்தின் முதல் 11 நாட்களில் உலக வெப்பநிலை இந்த ஆண்டுக்கான அதிகபட்ச அளவை எட்டியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஜுன் மாதத்தில் அதிக வெப்பம்


ஜுன் மாத தொடக்கத்தில் நம்மை தாக்கிய வெப்பம் என்பது இந்த மாதத்தில் முந்தைய வெப்பநிலையை விட 1.5°C அதிகமாக உள்ளது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் விஞ்ஞானிகள் வியாழக்கிழமை எச்சரித்தனர். தற்போது பதிவாகியுள்ள வெப்பநிலை 2015 பாரிஸ் உடன்படிக்கையில் குறைந்த வரம்பாக அமைக்கப்பட்டுள்ள வெப்ப வரம்பு குறியீடுதான் என்றாலும், அப்போது அந்த வெப்பநிலை அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2030-களின் முற்பகுதி வரை, அதாவது 2025 வரை இந்த வரம்பை வெப்பநிலை மீறாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள் முன்பாகவே அதனை தாண்டி சென்றிருப்பது சூழலியல் விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.



வெயிலால் சிரமப்படும் மக்கள்


புள்ளிவிவரங்களை தாண்டி, பொதுவாகவே பலரும் இந்த ஆண்டு அடிக்கும் வெயிலை தாள முடியவில்லை என்று புலம்புவதும், சாலையோரங்களில் முழுவதும் குளிர் பானக்கடைகள், இளநீர் கடைகள், தர்பூசணி, கரும்பு ஜுஸ், கிர்னி ஜுஸ் கடைகளின் கூட்டம் நிரம்பி வழிவதையும் நாம் பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். சாதாரணமாக வெயிலை தாங்கிக்கொள்ளக் கூடிய பலரும் இந்த வெயிலை கண்டு அஞ்சுவது இந்த ஆண்டு புதிதாக இருந்திருக்கும். இது நம் ஊரில் மட்டுமில்லை, உலகெங்கும் உள்ள நாடுகள் இதனை அனுபவித்து வருகின்றன என்பதுதான் இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம்.


தொடர்புடைய செய்திகள்: Ashes Series 2023: இன்று தொடங்கும் ஆஷஸ் யுத்தம்.. ரெக்கார்ட்ஸ் பட்டியலில் யார் முதலிடம்..? எங்கே எப்படி பார்ப்பது? முழு விவரம்


காலநிலை மாற்றம் எப்படி விலைவாசியை உயர்த்துகிறது?


உயர்ந்துவரும் வெப்பநிலையால், ஐரோப்பா மிகவும் வெப்பமான காலநிலையின் மற்றொரு கோடைகாலத்திற்கு வரக்கூடும் என்பதைக் குறிக்கிறது. அதே சமயம் உலகின் பிற பகுதிகள் எல் நினோ நிகழ்வின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்றன. வறட்சி காரணமாக பயிர்கள் அழிவதோடு, காட்டுத்தீயில் பல உணவு பொருட்கள் நாசமாவதல், ஏற்கனவே உள்ள உணவு பொருட்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் அதிகம் ஆகிறது. இதனால் குளிரூட்டும் தேவைகள் அதிகரித்து வருவதால், அதற்கான எரிசக்தி விலைகளில் பெரிய ஏற்றங்களை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. எரிசக்தி விலை உயரும்போது உள்ளபடியே அந்தந்த பொருட்களின் விளையும் உயரும் என்பதால் இந்த காலநிலை மாற்றம் விலைவாசி உயர்வில் பெரும் பங்கு வகிக்கிறது.



தினசரி சராசரி வெப்பநிலை தொடர்ந்து உயர்வு


கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின் துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் கூறுகையில், "ஜூன் தொடக்கத்தில் உலகம் இதுவரை கண்டிராத அளவு வெப்பத்தை பதிவு செய்துள்ளது," என்றார். ஜூன் மாதத்தில் சராசரி வெப்பநிலையை விட 1.5°C கூடுதல் ஆகி, சராசரி வரம்பைத் தாண்டியது இதுவே முதல் முறை என்றாலும், தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை உயர்வு மட்டத்திற்கு மேல் பதிவாவது, இது முதல் முறை அல்ல என்று கோபர்நிகஸ் கூறினார். மாதாந்திர மற்றும் பருவகால முன்னறிவிப்புகளுக்காக உலகெங்கிலும் உள்ள செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள் மற்றும் வானிலை நிலையங்களிலிருந்து பில்லியன் கணக்கான அளவீடுகளைப் பயன்படுத்தி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் இந்த தரவுகளை ஒருங்கிணைத்துள்ளனர்.