கராச்சியைச் சேர்ந்த ஒருவர் புயல் செய்தியை கடல் அருகே நின்று வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது அந்த கடலின் ஆழத்தை பார்ப்பதாக கூறி மைக்குடன் கடலில் குதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


பிபர்ஜாய் புயல்


வங்காள மொழியில் "பேரழிவு" என்று பொருள்படும் பிபர்ஜாய் என்ற பெயர் கொண்ட புயல் தற்போது கரையை கடந்தபின் வலுவிழந்துள்ளது. வியாழன் அன்று குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் புயல் கரையைக் கடந்த பிறகு பிபார்ஜாய் 'மிகக் கடுமையான புயல்' வகையிலிருந்து 'கடுமையான புயலாக' மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அறிக்கையின் படி, சூறாவளி இப்போது கடலில் இருந்து நிலத்திற்கு நகர்ந்து சவுராஷ்டிரா-கட்ச் நோக்கி மையம் கொண்டுள்ளது, மேலும் ராஜஸ்தானில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.



செய்தியாளர்களின் புயல் ரிப்போர்ட்டிங்


புயல் அச்சத்தில் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் ஒரு சிரிக்கவைக்கும் வீடியோ நேற்று வைரலானது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படும் நேரத்தில், ஆங்காங்கே மைக் மற்றும் கேமராவுடன் செய்தியாளர்கள் நிற்பது வழக்கம். செய்தி நிறுவனங்கள் செய்தியை அதிக மக்களிடம் கொண்டு சேர்க்க நொடிக்கு நொடி அப்டேட்ஸ் கொடுக்க உந்தப்படுகிறார்கள். இதனால் செய்தியாளர்கள் ஆபத்தான இடங்களில் நின்றுகொண்டு செய்திகள் தருவதை புயல் நேரத்தில் நாம் கண்டிருப்போம். செய்தியை ஆழமாக தருவதற்கு எந்த எல்லைக்கும் செல்லும் செய்தியாளர்களும் உண்டு. அதையே காமெடியாக மாற்றிய சம்பவத்தை பாகிஸ்தான் செய்தியாளர் செய்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Ashes Series 2023: இன்று தொடங்கும் ஆஷஸ் யுத்தம்.. ரெக்கார்ட்ஸ் பட்டியலில் யார் முதலிடம்..? எங்கே எப்படி பார்ப்பது? முழு விவரம்


கடலில் குதித்து ஆழத்தை ரிப்போர்ட் செய்த நபர்


கராச்சியைச் சேர்ந்த ஒருவர் புயல் செய்தியை கடல் அருகே நின்று வெளியிட்டுக் கொண்டிருக்கும்போது அந்த கடலின் ஆழத்தை பார்ப்பதாக கூறி மைக்குடன் கடலில் குதிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் நைலா இனாயத் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். புயல் வானிலை மற்றும் கடலின் ஆழம் குறித்து ஒரு நபர் 'அறிக்கை' கொடுப்பதை வீடியோ காட்டுகிறது. அந்த வீடியோவில் அவர் கடலின் ஆழம் குறித்து செய்தி கொடுக்க கடலில் குதிப்பதைக் காணமுடிகிறது.






கமென்ட்டில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


நீர்நிலையின் ஆழத்தை நிரூபிக்க அவர் கடல் நீரில் குளிக்கிறார். குதித்தவுடன் "இந்த தண்ணீர் ரொம்ப ஆழமா இருக்கு," என்று அவர் இந்தியில் கூறுவது கேட்கிறது. முடியும்போது வழக்கமாக கூறுவது போல, "கராச்சியின் அப்துல் ரெஹ்மான் நியூஸில் இருந்து ஒளிப்பதிவாளர் தைமூர் கானுடன், உங்கள் அப்துல் ரெஹ்மான்" என்று கூறி வீடியோவை முடிக்கிறார். "வானிலை அறிக்கையிடலில் மாஸ்டர் கிளாஸ்," என்று தலைப்பிட்டு அந்த விடியோ வெளியிடப்பட்டது.


பலர் இந்த வீடியோவிற்கு கீழ் மிகவும் துணிச்சலான ரிப்போர்ட்டர் என்று கமென்ட் செய்து வருகின்றனர். அந்த நபரின் வானிலை அறிக்கை நெட்டிசன்களுக்கு சந்த் நவாப்பை நினைவூட்டியது. ஒருவர், "பாகிஸ்தானின் மற்றொரு சந்த் நவாப் #BiparjoyCyclone குறித்து அறிக்கை செய்கிறார்" என்று கமென்ட்டில் எழுதினார். இன்னொருவர், "ஆஸ்கார் லெவல் ரிப்போர்ட்டிங்" என்று கமென்ட் செய்தார். சிலர் தண்ணீரில் மூழ்கிய பின்னரும் மைக் வேலை செய்வதை ஆச்சரியமாக பார்த்தனர். அதில் ஒரு பயனர், "செய்யும் வேலையில் மூழ்கி வேலை செய்வது இதுதானா?" என்று சர்காஸ்டிக்காக கேட்க இணையதளத்தில் இந்த டிவிட் வைரல் ஆனது.