ABP NADU IMPACT: 5 மாதங்கள் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

விபத்து ஏற்படுவதற்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும் என ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்தது.

Continues below advertisement
செங்கல்பட்டு: சென்னையில் இருந்து தென் மாவட்டத்திற்கு செல்வதற்கு முக்கிய சாலையாக, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சென்னையை தென் மாவட்டத்தையும், இணைக்கும் பிரதான சாலையாக, இந்த சாலை விளங்கி வருவதால், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், இந்த சாலையில் செல்கின்றன. இருசக்கர வாகனங்கள், கார்கள் பேருந்துகள் என ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் தாம்பரம் முதல் படாளம் வரை பல்வேறு இடங்களில் தரம் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

 
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியில் உள்ள, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், குண்டு குழியுமாக சாலை இருப்பது, வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வருடம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின் பொழுது சாலைகள் , ஒரு பகுதியில், சரியாக இல்லை என குற்றச்சாட்டை எழுந்ததை தொடர்ந்து, சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
 

 
சில மீட்டர் தூரத்திற்கு மட்டுமே சாலை அமைக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைப்பதற்கு முன்னால், சாலையை, கீறும் பணி மட்டுமே நடைபெற்றது. அதன் பிறகு கிட்டத்தட்ட 5 மாதங்கள் கடந்த பிறகும், இதுவரை அப்பகுதியில் சாலை அமைக்கப்படாமல் இருந்தது. சாலையில் கீறல்களாகவே காட்சியளித்து வருகிறது. கீறல்கள் போடப்பட்டுள்ளதால், குண்டும் குழியுமாக இருந்த சாலையில் மேலும் அபாயகரமாக மாற்றி உள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பு மற்றும் கோரிக்கையை புகார் பட்டி என்ற தொகுதியில் ஏபிபி நாடு சார்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி அனைத்து தற்போது நடைபெற்று வருகிறது. 
 

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

Continues below advertisement

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

 
Continues below advertisement