நாசாவின் மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope) கிறிஸ்துமஸ் தினத்தன்று விண்ணில் ஏவப்பட்டது. பால்வீதியில், பூமியைப் போன்று உயிர் இருந்த/இருப்பதற்குச் சாத்தியமான புறக்கோள்கள் (exoplanets) இருக்கின்றனவா, பெருவெடிப்பிலிருந்து முதல் விண்மீன் கூட்டங்கள் எப்படி உருவாகின போன்ற பல கேள்விகளுக்கு இத்தொலைநோக்கி பதில் சொல்லும். நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.
பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது. ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி நிறுவனங்கள் இத்திட்டத்துக்குப் பங்களித்துள்ளன.
இந்த புதிய தொலைநோக்கி, முன்னதாக, சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளியில் ஏவப்பட்ட ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்குசக்தி மற்றும் திறன் கொண்டதாகும். அதனுள் நிரப்பப்பட்டுள்ள எரிபொருள் உபயோகத்தை பொறுத்து இந்த தொலைநோகி அதன் உத்தேசித்த ஆயுட்கால அளவான 10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.
சரியாக ஏவப்பட்டதில் இருந்து ஒரு மாதம் கழித்து இந்த தொலைநோக்கி அதன் சுற்றுவட்டப்பாதையை அடைந்துள்ளது. தற்போது அது சரியாக பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இது கடந்த ஒரு மாதமாக பொறுமையாக பயணம் செய்து அதன் நிலையை அடைந்துள்ளது, இதற்காக நாசா விஞ்ஞானிகள் தகவல்கள் அனுப்பியுள்ளனர்.
"அடைந்தது, லக்ரேஞ்சை அடைந்தது! பூமியில் இருந்து ஒரு மில்லியன் மைல்கள் (1.5 மில்லியன் கிமீ) தொலைவில் உள்ள 2வது லாக்ரேஞ்ச் புள்ளியின் (எல்2) சுற்றுப்பாதையில் நாசா தொலைநோக்கியை சுற்றுப்பாதையில் தொடங்கும் வேலையை வெற்றிகரமாக முடித்தோம். இது L2ஐச் சுற்றி வருவதால், பூமிக்கு நேர்கோட்டில் சூரியனைச் சுற்றிவரும்" என்று நாசா ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது.
இந்த சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் இப்போது பிரபஞ்சத்தை பரவலாக கண்காணிக்கும் வழியை பெறும். இதுவரை, மிகக் குறைந்த எரிபொருளைப மட்டுமே பயன்படுத்தியுள்ளது, மேலும் இது நமது ஆஸ்ட்ரோனட்களின் விண்வெளி அடிப்படையிலான கண்களாக செயல்படுகிறது. ஒரு வலைப்பதிவு இடுகையில், NASA ஜேம்ஸ் வெப்பின் வேகம் குறித்து எழுதி இருந்தது, அதில் ஒரு வினாடிக்கு 1.6 மீட்டர்கள், வெறும் நடை வேகம் மட்டுமே அதற்கு கொடுத்துள்ளோம், என்று கூறியிருந்தனர்.
"கடந்த ஒரு மாதத்தில், JWST அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் பல ஆண்டுகள் மற்றும் பல தசாப்தங்களாக இந்த வெற்றியை உறுதிசெய்ய தங்கள் நேரங்களை செலவிட்ட அனைவருக்கும் இது சமர்ப்பணம்" என்று நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தின் வெப் திட்ட மேலாளர் பில் ஓக்ஸ் கூறினார். "நாங்கள் இப்போது கண்ணாடிகளை சீரமைத்தல், கருவிகளை செயல்படுத்துதல், தகவல்கள் அனுப்புதல் மற்றும் அற்புதமான மற்றும் வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளின் தொடக்கத்தில் இருக்கிறோம்," என்று அவர் மேலும் உற்சாகத்துடன் கூறினார்.