விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் நேற்று காலை தொப்புள் கொடியுடன் கூடிய பச்சிளம் குழந்தை மற்றும் பெண் ஒருவர் பிணமாக கிடந்தனர். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு ஏட்டு பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்து கிடந்தவர்களின் உடல்களை மீட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் தாய்-குழந்தை என்பது தெரியவந்தது.


இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் - 3 பேரை காவலில் எடுக்க போலீஸ் தயக்கம்?


தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய பெண் என்பதும், இவருடைய கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதும் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பலருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக கர்ப்பமடைந்துள்ளார். மேலும் அவர் எச்.ஐ.வி. நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேல்மலையனூர் பெரிய ஏரி அருகில் வசித்து வந்த அவர் நேற்று மாலை குழந்தையுடன் பிணமாக மிதந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


அதிர்ஷ்டம் தரும் வைரக்கல் தருவதாக கூறி 5 லட்சம் அபேஸ் - காவலர் உட்பட 3 பேர் கைது




17 வயது மகளுக்கு தந்தை, அண்ணன்களால் பாலியல் வன்கொடுமை.. உடந்தையாக தாய்.. சென்னையில் கொடூரம்..


இதையடுத்து குழந்தை மற்றும் தாயின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் பிரசவ வலி ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்தும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பெண்ணின் கணவரும் எச்.ஐ.வி. தொற்றால் இறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏரியில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தையும், தாய் இறந்து கிடந்த சம்பவம் மேல்மலையனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண