தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. அதுமட்டுமல்லாமல் தமிழ்சினிமாவில் கொடிகட்டி பறந்த அமலா, ரேவதி, ராதா, ராதிகா போன்ற ஹீரோயின்களையும், ஜனகராஜ், நெப்போலியன், பாண்டியன், சந்திரசேகர், கார்த்திக் போன்ற பல நடிகர்களையும் சினிமாத் துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.


தில் கர்த்திக்கையும் ராதாவையும் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். கார்த்திக் நடித்த முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது.1981 இல் ஆரம்பித்த கார்த்திக்கின் திரைப்பயணம் 40 வருடம் தாண்டியும் தொடர்கிறது. இந்த திரைப்படத்தில் முதல் நாள் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதையும், ராதா கார்த்திக் ஒருவரை ஒருவர் சந்தித்ததையும் மிகவும் ஸ்வாரஸ்யமாக ஒரு மேடையில் கூறியுள்ளனர்.



இருவரும் மேடையில் நிற்க கார்த்திக் பேசுகிறார், "என்னுடைய குரு பாரதி ராஜா என்னை கூப்பிட்டு, நீ இன்னும் ஹீரோயின பாக்கலையே, வா காட்றேன்னு கூட்டிட்டு போனார். நானும் போனேன், அங்க ஒரு ரூம்ல காத்திருந்தோம். ஒரு சிலை மாதிரி வந்து நின்னாங்க. அவங்க புத்தம் புது காலை பாடலுக்கு கொடுத்த பாவங்கள் அப்படி இருந்துச்சு. இதுவரைக்கும் கேமராவே பார்த்தது இல்ல, கேமரா முன்னாடி நடிச்சது இல்ல ஆனா அவ்வளவு நல்ல பாவனைகள கொண்டு வந்தாங்க, நான் ஆச்சர்யபட்டு போய்ட்டேன்." என்று கூற, ராதா, "ரொம்ப நன்றி, அப்போ எனக்கு தமிழ் சுத்தமா பேச வராது. இப்போவும் பெருசா வராது, அதுல எனக்கு பெரிய பயம். முதல் படம் வாய்ப்பு போய்டுமோன்னு. ஆனா நான் கார்த்திக் சாரை பார்த்தேன், ஒரு மாதிரியா தமிழ் பேசிட்டு இருந்தார். பெரும்பாலும் இங்கிலீஷ் பேசினார். அப்போதான் நிம்மதி ஆனேன், கம்பெனிக்கு ஒரு ஆள் இருக்காருன்னு. அப்போ எங்களுக்கு முதல் வசனம், 'ஏன் லேட்?' ன்னு கேக்கணும். அவர் 'கொஞ்சம் நேரம் ஆகிடுச்சு'ன்னு சொல்லுவாரு." என்று கூறினார்.



அவரை இடைமறித்து பேசிய கார்த்திக், "அதனாலதான், நான் எந்த இயக்குனரை பார்க்க சென்றாலும் தாமதமாக சென்றால், 'ஏன் லேட்?' என்று கேட்டால் என் திரைப்பட வாழ்வில் எனக்கு தந்த முதல் வசனம் 'ஏன் லேட்?' தான். அதனால தான் எல்லாமே லேட் ஆகுது, அதற்கு நான் காரணம் இல்லை, என் இயக்குனர்தான் காரணம் என்று கூறுவேன். என் அப்பா சொல்வார், யாருக்கு டேட் கொடுத்திருந்தாலும் ஸ்ரீதர் சார் கூப்பிட்டால் சென்று விடுவேன் என்று, நான் டைரக்டர் (பாரதிராஜா) கூப்பிட்டா போய்விடுவேன். அதனால் நான் நிறைய பிரச்சனைகளும் சந்திச்சிருக்கேன், அது அவருக்கும் தெரியும். இங்கு ரஜினி சார், கமல் சார், இவ்வளவு நடிகர்கள் இருக்கிறோம் என்றால் காரணம் இயக்குநர்கள். இயக்குநர்கள் கடவுள்கள். அவர்கள் படைப்புகள் அற்புதமானது. ஒவ்வொருவரும் குரு, ஒவ்வொரு படமும் பாடம்." என்று பேசி முடித்தார்.